தமிழ்நாடு காவல் துறையில் புதிய மென்பொருள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, பிப்.27- தமிழ்நாடு காவல்துறையின் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதற்காக ‘சி.சி.டி.என்.எஸ். 2.0′ என்ற மென்பொருள் ரூ.124.37 கோடியில் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த மென்பொருள் காவல்துறை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது. இது ஒரு மேம்பட்ட தொழில்நுட்பமாகும். இதில் சமுதாய சேவைப் பதிவேடு (சி.எஸ்.ஆர்.), முதல் தகவல் அறிக்கை (எப்.அய்.ஆர்) மற்றும் முதல் நிலை விசாரணை ஆகியவைகளைப் பதிவு செய்ய இயலும்.

மேலும் முதல் தகவல் அறிக்கை, குற்றப்பத்திரிகை மற்றும் விசாரணை அறிக்கைகள் ஆகியவைகளை இணைய வழியில் உடனடியாக நீதிமன்றத்துக்கும் அனுப்ப முடியும். பொதுமக்கள் இணைய வழியில் புகாரினைப் பதிவு செய்தல், சமுதாய சேவைப் பதிவேடு, முதல் தகவல் அறிக்கை மற்றும் இணைய வழி புகார் ஆகியவற்றின் தற்போதைய நிலையை இந்த மென்பொருள் மூலம் அறிந்து கொள்ளலாம். கைது செய்யப்பட்ட நபரின் விவரங்களை கூட இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

சாலை விபத்து ஆவணங்களைப் பதிவிறக்க செய்தல் ஆகிய சேவைகளையும் பொதுமக்கள் பெறலாம். இந்த புதிய மென்பொருள் சேவையை போன்று டிஜிட்டல் கைரேகை சேகரிப்பு என்ற அமைப்பும் காவல் துறையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த 2 திட்டங்களும் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் பயன்பாட்டுக்கு வருகிறது. இந்த 2 புதிய திட்டங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (28.2.2026) தொடங்கி வைக்க உள்ளார்.

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *