சென்னை மாநகராட்சியில் 35 நடைபாதை ஒப்பந்தங்கள் ரத்து! 12 மாநகராட்சி தூய்மைப் பணி ஒப்பந்தங்களும் ரத்து

சென்னை, ஜூன் 27- மாநகராட்சியில் ரூ.284 கோடி மதிப்பிலான 35 நடைபாதை ஒப்பந்தங் களை தமிழ்நாடு அரசு ரத்து செய்துள்ளது. சென்னை மாநகராட்சியில் ரூ.284 கோடியில் 35 நடைபாதைகளை சீரமைக்கும் ஒப்பந்தங்கள் கடந்த பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டிருந்தன.

அதன் பிறகு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால், ஒப்பந்ததாரருக்கு பணி ஆணை வழங்கப்பட வில்லை. இந்நிலையில் புதிதாக பொறுப்பேற்ற தவெக அரசு, இந்த ஒப்பந்தங்களை ரத்து செய்துள்ளது.

திமுக ஆட்சியில் தூய்மைப் பணியை தனியார் மயமாக்கக் கூடாது. ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர்.

அப்போது அவர் களுக்கு தவெக தலைவர் விஜய் ஆதரவளித்திருந்தார். இந்நிலையில் தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு, ஆவடி, ஓசூர், தாம்பரம், வேலூர், கோவை ஈரோடு, சேலம், திருப்பூர், மதுரை, தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி ஆகிய 12 மாநகராட்சிகளில் திடக் கழிவு அகற்றம் மற்றும் கொண்டு செல்லும் பணிகளை அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக 3 தொகுப்புகளாக சுமார் ரூ.4 கோடியில் ஒப்பந்தங்கள் கோரப்பட்டது.

இதற்கு கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சமூக வலைத்தளங்களில், விஜய், தூய்மைப் பணியாளர்களுக்காக செய்த பதிவை டேக் செய்து, தூய்மைப் பணியை தனியாருக்கு வழங்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் இந்த ஒப்பந்தத்தை தமிழ்நாடு அரசு ரத்து செய்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *