டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* இந்தியா கூட்டணிக்கு தலைமை தாங்க தகுதியானவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் கருத்து.
* எஸ்அய்ஆர் பணி நிறைவு-இறுதி பட்டியல் வெளியீடு தமிழ்நாட்டில் 5.67 கோடி வாக்காளர்கள்: 74.07 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்; 27.53 லட்சம் பேர் புதிதாக சேர்ப்பு; பெயர் சேர்க்க இனியும் விண்ணப்பிக்கலாம்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
*காங்கிரஸ் தனது கட்சியின் பலத்தை உணர்ந்து கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்கிறது தலையங்கம்.
< நீட்-பிஜி கட்-ஆப் மதிப்பெண் குறைப்பால் மருத்துவக் கல்வியின் தரம் பாதிப்பா? ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் முடிவு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ”மோடிஜி, நீங்கள் அவமானம் பற்றி பேசுகிறீர்களா? அவமானம் என்றால் என்ன என்பதை நான் உங்களுக்குச் சொல்கிறேன். எப்ஸ்டீன் கோப்புகளில் உங்கள் பெயர், உங்கள் அமைச்சர் மற்றும் உங்கள் நண்பரின் பெயர்கள் ஒன்றாகக் காணப்படுகின்றன. இவ்வளவு மோசமான குற்றவாளியுடன் நீங்கள் இணைக்கப்பட்டு இருக்கிறீர்கள். இதுதான் அவமானகரமான செய்தி”, பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி பதிலடி.
தி இந்து:
* அமலாக்கத்துறை – அய்டி – சிபிஅய் ஆகியவற்றை வைத்து எங்களையும் மிரட்டலாமா என்று பார்க்கிறார்கள். என்னதான் பாஜக, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஅய் என்று தன்னுடைய படை பரிவாரத்தை அழைத்து வந்தாலும், அதை ஒரு கை பார்க்க நாங்களும் தயாராகத் தான் இருக்கிறோம், மு.க.ஸ்டாலின் சவால்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* எம்.டி., எம்.எஸ். சேர்க்கைக்கான தகுதியை நிர்ணயிப்பதல்ல நீட் பி.ஜி. கட் ஆஃப் மதிப்பெண்: உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு வாதம். எம்.டி, எம்.எஸ். படிக்க விண்ணப்பித்தவர்கள் ஏற்கனவே எம்.பி.பி.எஸ். படித்தவர்கள் என்பதால், தகுதி பாதிக்காது. நீட் பி.ஜி கட் ஆப் குறைப்பை நியாயப்படுத்தி உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு வாதிட்டதால் கல்வியாளர்கள் அதிர்ச்சி.
– குடந்தை கருணா
