மகளிர் உரிமைத் தொகையை யாராவது நிறுத்த முற்பட்டால் தமிழ்நாடே கொந்தளிக்கும்! அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலுரை

3 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, பிப். 23- தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் மீதான விவாதத்துக்கு 20.2.2026 அன்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதிலுரை ஆற்றினார். அதில்,

*   அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தை நிறைவேற்ற பல தடைகள், சோதனைகள் வந்தன. இந்த ஆட்சி பதவியேற்ற உடன் முறையாக பயிற்சி பெற்ற 23 பேர் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டனர்.

மகளிர் உரிமைத் தொகை

*   மாவட்டந்தோறும் தோழி விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு நலத்திட்டங்கள், வட சென்னை வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது.சமூக நீதிக்காக நமது திராவிட மாடல் அரசு என்றென்றும் தொடர்ந்து போராடும்.

*   முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற உடன் போட்ட முதல் கையெழுத்து மகளிர் விடியல் பேருந்து தான். பெண்களுக்கான பொருளாதார சுதந்திரத்தை அளிக்கும் வகையில் விடியல் பயணம் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

*   கடைக்கோடி மக்களின் நலன் காக்கும் ஆட்சியாக உள்ளது திராவிட மாடல் ஆட்சி.கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் நாட்டிற்கே முன்னோடியாக விளங்குகிறது.

*   நமது முதலமைச்சர் ஆட்சியில் மகளிர் நலன் காக்க திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. திராவிட மாடல் ஆட்சி நாட்டிற்கே நல்வழி காட்டும் நல்லாட்சி.

*   மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடன் அளிப்பதில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாட்டில் உயர்கல்வி மாணவர் சேர்க்கை தேசிய சராசரியை விட 2 மடங்கு அதிகம் ஆக உள்ளது.

*   பள்ளி குழந்தைகள் பசியின்றி பயில அறிமுகம் செய்யப் பட்ட திட்டம்தான் காலை உணவுத் திட்டம். பெற்றோர் இழந்த குழந்தைகளை அரவணைத்து பாதுகாக்க அன்புக்கரங்கள் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

*   பெயர் என்பது ஒரு சமூகத்தின் ஆணிவேர். பெயர்களை சூட்டுவதிலும் பெயரை மாற்றுவதிலும் தமிழ்நாடு அரசு உயர்ந்த கவனத்தோடு செயல்பட்டு வருகிறது.

*   உலகத்தில் உள்ள தமிழர் களும் பயன்பெறும் வகையில் அயலக தமிழர் மாநாடு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது.

*   நாடே வியக்கும் வண்ணம் கீழடி, பொருநை அருங் காட்சியகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வடிவமைத்துள்ளார். தமிழ் பண்பாட்டின் காவலர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்பது என்றும் வரலாற்றில் மறக்கப்படாது. நமது தாய்மொழி நாட்டிற்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்டியவர் அண்ணா.

*   வளர்ந்த நாடுகளுக்கு இணையாக தமிழ்நாடு வளர்ச்சி பெற வேண்டும் என்பதுதான் திமுக அரசின் இலக்கு.

*   5 ஆண்டுகளில் ஜாதி, மத மோதல்கள் எதுவும் இல்லாமல் தமிழ்நாடு அமைதியாக உள்ளது. தமிழ்நாடு அமைதி பூங்காவாக உள்ளது. மெட்ரோ ரயில் திட்டம், ஜல் ஜீவன் திட்டத்துக்கு நிதி தருவதை ஒன்றிய அரசு நிறுத்தி வைத்துள்ளது.

*   நாட்டிற்கே நல்வழி காட்டும் நல்லாட்சியாக திராவிட மாடல் ஆட்சி உள்ளது. கரோனா காலத்தில் ஏற்பட்ட நெருக்கடியை சமாளித்து பொருளாதாரத்தை மீட்டெடுத்தது திராவிட மாடல் ஆட்சி. இயற்கை பேரிடர்கள் மட்டுமல்லாமல், ஒன்றிய அரசு உருவாக்கும் செயற்கை நிதி நெருக்கடிகளையும் திமுக அரசு சமாளித்துள்ளது.

*   மகளிர் உரிமைத் தொகையை யாராவது நிறுத்த முற்பட்டால் தமிழ்நாடே கொந்தளிக்கும். கொந்தளிப்பு உணர்வு இருக்கும்வரை தமிழ்நாட்டில் ஆட்சி செய்வது முத்து வேல் கருணாநிதி ஸ்டாலின்தான்.

*              சமூக நீதிக்கு பங்கம் வரும்போது எல்லாம் தமிழ்நாடு உரத்த குரல் கொடுக்கும். வளர்ந்த நாடுகளுடன் தான் தமிழ்நாடு போட்டியிடுகிறது; மற்ற மாநிலங் களோடு அல்ல. தென் கிழக்கு ஆசிய நாடுகளுடன்தான் நாம் போட்டி போடுகிறோம்.” இவ்வாறு தெரிவித்தார்.

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *