நாகர்கோவில், பிப். 22- கன்னியாகுமரி மாவட்ட கழகத்தில் இணைந்த புதிய இளைஞர்களை, மாவட்ட கழக தலைவர் மா.மு.சுப்பிரமணியம், மாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றிவேந்தன் மற்றும் நிர்வாகிகள் இளைஞர்களை வாழ்த்தி வரவேற்று பாராட்டினர்.
நாகர்கோவில், ஒழுகின சேரி பெரியார் மய்யத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பகுத்தறிவாளர்கழக மாவட்டத் தலைவர் உ. சிவதாணு, மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர் மஞ்சு குமார தாஸ், மாவட்ட மாணவர் கழகத் தலைவர் மோ.செ. பரத், மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.அலெக்சாண்டர், பொதுக்குழு மு.இராசேகர், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய தலைவர் எஸ்.குமார தாஸ், தோவாளை ஒன்றிய தலைவர் மா.ஆறுமுகம், ஞா.பிரான்சிஸ், குருந்தன் கோடு கழக ஒன்றியத் தலைவர் வில்லுக்குறி செல்லையா, குமரி நகர கழக செயலாளர் க.யுவான்சு தோழர்கள் மு.குமரிச்செல்வன், பா.சு. முத்துவைரவன், பிரவின் ஆகியோர் பங்கேற்றனர்.
கல்லூரி மாணவர்க ளுக்கான விழிப்புணர்வு நூல்கள் வழங்கப்பட்டன.
