தஞ்சை இருபெரும் மாநில மாநாட்டிற்கு தனி வாகனத்தில் சென்று சிறப்பிப்போம் மேட்டுப்பாளையம் கழக மாவட்ட கலந்துரையாலில் தீர்மானம்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

தேக்கம்பட்டி, பிப். 20- பிப்ரவரி 21 தஞ்சையில் நடைபெறவிருக்கும் இருபெரும் மாநில மாநாட் டிற்கு மேட்டுப்பாளையம் (கழக) மாவட் டத்திலிருந்து  தனி பேருந்தில் வருகைப் புரிந்து பெருந்திரளாக பங்கேற்று சிறப்பிப்பது என மேட்டுப்பாளையம் (கழக) மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

15.02.2026 அன்று மாலை 4 மணியளவில் குட்டைப்புதூர் தேக்கம்பட்டியில்  மேட்டுப்பாளையம் கழக மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.

மாநில இளைஞரணிச் செய லாளர் சி.பி.க.நாத்திக.பொன்முடி, தலைமை வகித்து கூட்டத்தின் நோக் கங்களையும், இருபெரும் மாநில மாநாடு குறித்தும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தொடர் பயணங்கள் குறித்தும் விளக்கிப் பேசினார்.

மாவட்ட மாணவர் கழகத் தலைவர் மு.பிரபா கரன்,  மாவட்ட மகளி ரணித் தலைவர். இரா.நாகமணி, ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்.

மாவட்ட தலைவர் சு.வேலுச் சாமி,  மாவட்ட செயலாளர்  இரா.அரங்கசாமி, ஆகியோர் கருத்துரையாற்றினர்

மாநில இளைஞரணி  துணை செயலாளர் மு.வீரமணி நிகழ்வினை ஒருங்கிணைத்து தொடக்க வுரையாற்றினார்.

கழகப் பேச்சாளர்  இரா.அன்புமதி,  சிறப்புரையாற்றினார். மேட்டுப்பாளையம் நகரச் செயலாளர் வே.சுந்திரன் மாவட்டத் துணைச் செயலா ளர் நாராயணன் மேட்டூர் முருகேசன், விக்னேஷ், தியாகராசன், கிருஷ்ணன், ராஜலட்சுமி, முத்துசாமி, திராவிட மணி, மேட்டுப்பாளையம் ரங்கசாமி, விக்னேஷ். ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

பிப்ரவரி – 21 இல் தஞ்சாவூரில் நடை பெறவிருக்கும் இரு பெரும் மாநில மாநாட்டிற்கு மேட்டுப்பாளையம் கழக மாவட்டத்தின் சார்பில் தனி வாகனத்தில் சென்று சிறப்பிப்பது எனவும் தீர்மானிக்கப்படுகிறது.

மாவட்ட இளஞரணி தலைவர் நா.பிரதீப் நன்றி கூறினார்.

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *