ஆவடி, ஜூலை 1- ஆவடி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 28.6.2026 அன்று மாலை 06-00 மணிக்கு மாவட்ட கழக தலைவர் வெ.கார்வேந்தன் தலை மையில் செயலாளர் க.இளவரசன் ஒருங்கிணைப்பில் ஆவடி நகர கழக செயலாளர் இ.தமிழ்மணி கடவுள் மறுப்பு கூற தொடங்கியது.
முதலாவதாக அண் மையில் காலமான திரைப்பட இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்யராஜ் ஆகியோரின் மறைவுக்கு மரியாதை செலுத்தும் வண்ணம் ஒரு நிமிடம் அமைதி காக்கப்பட்டது.
அடுத்ததாக 08-06-2026 அன்று ஆவடி மாவட்டம் பட்டாபி ராம் பகுதியில் நடைபெற்ற முத்தமிழறிஞர் கலைஞர் அவர் களின் 103ஆவது பிறந்த நாள் விழா கூட்ட வரவு – செலவு மாவட்ட கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
சேலத்தில் ஜூலை 4ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழு கூட்டத்திற்கு களப் போராட்டத்திற்கு ஆயிரம் இளைஞர்கள் பட்டியலோடு வருக என்ற தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவிப்புக்கிணங்க ஆவடி மாவட்டக் கழகம் சார்பாக இருபதுக்கும் மேற்பட்ட இளைஞர்களின் பட்டியலை பொதுக்குழுவில் வழங்குவது.
அம்பத்தூர் பகுதியில் நடைபெற இருந்த கலைஞர் 103ஆவது பிறந்த நாள் விழா கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதை தொடர்ந்து அக் கூட்டத்தை ஜூலை மாதத்தில் சிறப்பாக நடத்துவது.
மாவட்டக் கழகம் சார்பாக விரைவில் “கொள்கை குடும்ப உறவுகள் சந்திப்பு விழா” நடத்தவது.
மேற்கண்ட தீர்மானங்களை யொட்டி அம்பத்தூர் நகர கழகத் தலைவர் பூ.இராம லிங்கம், செயலாளர் அய்.சரவணன், திருமுல்லைவாயல் நகர கழக தலைவர் இரணியன், பட்டாபிராம் நகர கழக தலைவர் இரா.வேல்முருகன், அயப்பாக்கம் அரிகிருஷ்ணன், பெரியார் பெருந்தொண்டர் அம்பத்தூர் அ.வெ.நடராசன், மாவட்ட கழகத் துணைச்செயலாளர் தமிழ்ச் செல்வன், ஆவடி புருசோத்தமன் ஆகியோர் உரையாற்றிய பின் மாவட்ட கழக தலைவர் வெ.கார் வேந்தன் உரையாற்றினார்.
இறுதியாக பட்டரவாக்கம் ரவிச்சந்திரன் நன்றி கூற கூட்டம் முடிவு பெற்றது.
