தஞ்சாவூர், பிப்.15– பிப்ரவரி-21 மாலை தஞ்சாவூரில் திராவிடர் கழக இளைஞரணி, மகளிரணி, திராவிட மகளிர் பாசறை, திராவிட மாணவர் கழக மாநில மாநாடு நடைபெறும் திலகர் திடல் சமப்படுத்தும் பணிகள் 12.02.2026 அன்று முதல் ஜெ.சி.பி எந்திரம் கொண்டு நடைபெற்று வருகிறது
மாநில ஒருங்கிணைப் பாளர் இரா. ஜெயக் குமார், மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், மாவட்டக்காப்பாளர் மு.அய்யனார், மாவட்ட துணைத் தலைவர் பா.நரேந்திரன், மாநகர செயலாளர் இரா.வீரக்குமார், பொன்னை திருநாவுக்கரசு ஆகியோர் பணிகளை மேற் கொண்டனர் தொடர்ந்து நன்கொடை திரட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
