இதுதான் ஏழை இந்தியாவா? 2021-2025 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டுப் பயணச் செலவு ரூ.462 கோடி : ஒன்றிய அரசு

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, பிப். 14- பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு 2021-2025 ஆண்டுகளில் ரூ.462 கோடி செலவாகியுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி கடந்த சில ஆண்டுகளாக மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்களுக்காக செலவுகள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதில், கடந்த 2021 முதல் 2025ஆம் ஆண்டு வரை சுமார் ரூ.462 கோடி செலவிடப்பட்டுள்ளது. குறிப்பாக பிரதமர் மோடியின் அமெரிக்க சுற்றுப்பயணத்துக்கு மட்டும் ரூ.74 கோடி செலவிடப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணத்துக்காக சராசரியாக ஆண்டுக்கு ரூ.115 கோடி செலவிடப்படுகிறது என்றும் கடந்த 4 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணத்துக்கு மட்டும் ரூ.420 கோடி செலவு என்றும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

2021 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் சுமார் 43 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அமெரிக்கா, அய்க்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு தலா நான்கு முறை சென்றுள்ளார். அதைத் தொடர்ந்து பிரான்சு நாட்டிற்கு மூன்று முறையும் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ரஷ்யா மற்றும் பிரேசில் உள்ளிட்ட நாடுகளுக்கு இரண்டு முறையும் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி வெளிநாடுகளுக்கு சென்ற செலவு விவரங்களின் அடிப்படையில், 2025இல் பிரதமர் மோடி பிரான்ஸ் சென்றதற்கு அதிக செலவு செய்யப்பட்டுள்ளது. பிரான்ஸ் பயணத்துக்கு மட்டும் ரூ.25 கோடிக்கு அதிகமாக செலவிடப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் இரண்டாவது மிகவும் விலை உயர்ந்த பயணம் ஜூன் 2023இல் அமெரிக்கப் பயணமாகும். இதற்காக ரூ.22.8 கோடி செலவிடப்பட்டது. மூன்றாவது அதிகபட்ச செலவு செப்டம்பர் 2021இல் அமெரிக்கப் பயணத்தின் போது பதிவு செய்யப்பட்டது, இதற்காக ரூ.19.6 கோடி செலவிடப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *