மணிப்பூர் வன்முறை! வழக்கு விசாரணை குறித்து சி.பி.அய்.-யிடம் அறிக்கை கேட்கும் உச்சநீதிமன்றம்

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, பிப்.14 மணிப்பூரில் கடந்த 2023-ஆம் ஆண்டு குகி- மெய்தி ஆகிய இரண்டு சமூகத்தினருக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் வன்முறையாக வெடித்தது. 250-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

ஆயிரக்கணக்கான வீடுகள் தீ வைத்து கொழுத்தப்பட்டன. மக்கள் சொந்த வீடுகளை இழந்து அண்டை மாநிலங்களுக்கும், முகாம்களுக்கும் தப்பி ஓடினர். இந்த வன்முறை தொடர்பாக 11 வழக்குகளை சிபிஅய் விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் நேற்று தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான நீதிபதி ஜாய்மால்யா பாக்சி கொண்ட அமர்வு முன்  விசாரணைக்கு வந்தது. அப்போது, “11 எப்.அய்.ஆர். தொடர்பாக விசாரணையின் தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டனர்.

மேலும், நீதிபதி கீதா மிட்டல் தலைமையிலான கமிட்டி பரிந்துரை செய்த மறுவாழ்வு மற்றும் நலத்திட்டம் ஆகியவற்றை அமல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்று மாநில மற்றும் ஒன்றிய  அரசை கேட்டுக்கொண்டனர்.

அத்துடன் வழக்கை வருகிற 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

‘வந்தே மாதரம்’ தொடர்பான

ஒன்றிய அரசின் உத்தரவு

வந்தே மாதரம் தொடர்பான ஒன்றிய அரசின் உத்தரவு, அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது, மத சுதந்திரத்துக்கு எதிரானது என்று அனைத்து இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்க மொழியில் எழுதப்பட்டுள்ள வந்தே மாதரம் பாடலில் துர்கா மற்றும் பிற கடவுள்களை வழிபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம்கள் அல்லா ஒருவரையே வழிபடுவர் என்பதால் அந்த அறிவிக்கையை ஒன்றிய அரசு திரும்பப் பெறும்படி கேட்டுக் கொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் பொருளாதாரம்?

பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி

ரூ.7 லட்சம் கோடி இழப்பு

அய்டி பங்குகளின் மதிப்பு சரிவால் இந்திய பங்குச்சந்தைகள் கடுமையாக வீழ்ச்சியடைந்தன. சென்செக்ஸ் 1,048 புள்ளிகள் சரிந்து 82,626 புள்ளிகளிலும், நிஃப்டி 336 புள்ளிகள் சரிந்து 25,471 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தன. குறிப்பாக டாடா ஸ்டீல், டைட்டன் நிறுவன பங்குகள் பெரும் இழப்பைச் சந்தித்தன. இதனால், முதலீட்டாளர்கள் சுமார் ரூ.7 லட்சம் கோடி வரை இழந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *