மகளிர் உரிமைத் தொகை ரூ.5 ஆயிரம் முன்கூட்டியே அளிப்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை பிப்.13 கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் பயனாளிகளான 1.31 கோடி பேருக்கு ரூ.5 ஆயிரத்தை விடுவித்துள்ளது தமிழ்நாடு அரசு. இது மூன்று மாதத்துக்கான முன்பணம் மற்றும் சிறப்புத் தொகை ஆகும். வரும் சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத் தொகை ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “தமிழ்நாட்டு மகளிருக்கு இந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத் தொகை. யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன். தேர்தலைக் காரணம் காட்டி மூன்று மாதங்களுக்கு உரிமைத் தொகையை முடக்கப் பார்க்கிறார்கள். முந்திக்கொண்டது நமது திராவிட மாடல் அரசு.

பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம் மற்றும் கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம் என 1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் இன்று (13.2.2026) காலை
5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது. மகளிரின் ஆதரவோடு அடுத்தும் நாங்கள்தான் வெல்வோம்.

‘திராவிட மாடல் 2.0’ ஆட்சியில் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையை 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்குவோம். இது, என் சகோதரிகளுக்கு இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதி. வெல்வோம் ஒன்றாக!” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

மகளிர் உரிமைத்தொகை: கடந்த 2023-இல் முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளன்று ‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகை’ திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு தொடங்கியது. கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக திமுக அறிவித்த ஏழு முக்கியமான தேர்தல் வாக்குறுதி களில் இதுவும் ஒன்று. அப்போது 1 கோடியே 13 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த திட்டத்தின் பயனாளிகளாக இருந்தனர்.

இந்த சூழலில் கடந்த ஆண்டு டிசம்பரில் 16,94,339 பயனாளிகள் சேர்க்கப்பட்டு திட்டம் விரிவு செய்யப்பட்டது. தற்போது இந்த திட்டத்தின் மூலம் பயனடையும் பயனாளர்களின் எண்ணிக்கை 1 கோடியே 30 லட்சத்து 69,831 என தற்போது உள்ளது. இவர்கள் அனைவருக்கும் இன்று (13.2.2026) ரூ.5 ஆயிரம் விடுவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *