14.2.2026 சனிக்கிழமை
செங்கல்பட்டு மாவட்ட கழகம், பகுத்தறிவாளர் கழகம் கலந்துரையாடல் கூட்டம்
மதுராந்தகம்: மாலை 4 மணி *இடம்: அறிவுக்கடல் தையலகம், மதுராந்தகம் (ஏழுமலை அய்யா கடை) *தலைமை: அ.செம்பியன் (மாவட்ட கழக தலைவர்) *வரவேற்புரை: ம.நரசிம்மன் (மாவட்ட செயலாளர்) *ஒருங்கிணைப்பு: சே.சகாயராஜ் (மாவட்ட ப.க. தலைவர்) *தொடக்கவுரை: பொன்.மாறன் *நோக்கவுரை: வி.பன்னீர்செல்வம் (கழக மாநில ஒருங்கிணைப்பாளர்) *முன்னிலை: திராவிடர் கழக பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர்கள். *நன்றியுரை: ஏ.செல்வம்
மேட்டூர் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்
எடப்பாடி: காலை 10.30 மணி *இடம்: எடப்பாடி – சின்னமணலி பெரியார் படிப்பகம் *வரவேற்புரை: ப.கலைவாணன் (மாவட்ட கழக செயலாளர்) *தலைமை: கா.நா.பாலு (மாவட்ட கழகத் தலைவர்) *முன்னிலை: சிந்தாமணியூர் சி.சுப்பிரமணியன் (கழக காப்பாளர்), பழனி.புள்ளையண்ணன் (கழக காப்பாளர்) *பொருள்: 6.2.2026 அன்று நடைபெற்ற தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பெரியார் உலகம் நிதி அளிப்பு விழா வரவு செலவு கணக்கு சரிபார்த்தல் மற்றும் பற்றாக்குறை ஈடு கட்டுதல் சம்பந்தமாக, 21.2.2026 தஞ்சையில் நடைபெற்ற மாநாடு குறித்து *நன்றியுரை: கோவி.அன்புமதி (மாவட்ட ப.க. தலைவர்) *விழைவு: கழகத் தோழகள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள கேட்டுக் கொள்கிறோம்.
உண்மை வாசகர் வட்டம் நடத்தும்
அறிஞர் அண்ணா நிறைவு நாள் கருத்துக் களம்
தூத்துக்குடி: மாலை 5 மணி *இடம்: பெரியார் மய்யம், அன்னை நாயகம்மையார் அரங்கம், எட்டயபுரம், தூத்துக்குடி *தலைமை: மோ.அன்பழகன் (திமுக) *வரவேற்புரை: த.பெரியார்தாசன் (மாநகர கழகத் தலைவர்) *முன்னிலை: சு.காசி (காப்பாளர்), மு.முனியசாமி (மாவட்ட கழகத் தலைவர்), *தலைப்பு: அண்ணாவின் சமூக அரசியல் களம் *உரையாற்றுவோர்: ச.வெங்கட்ராமன், சொ.பொன்ராஜ், சீ.மனோகரன், கவிஞர் கோ.இளமுருகு*சிறப்புரை: மா.பால்ராசேந்திரம் (கழகப் பேச்சாளர்) *நன்றியுரை: செ.செல்லத்துரை.
