அமராவதி, பிப்.11 செயல்திறனற்ற வட மாநிலங்களுக்கு, தென் மாநிலங்களைவிட அதிக நிதி ஒதுக்கும் ஒன்றிய அரசின் செயல் தவறானது என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அவர்கள் தெரிவித்துள்ளார்.
அமராவதியில் செய்தியாளர்களிடம் பேசிய சந்திரபாபு நாயுடு, நாடு செழிக்க வேண்டுமானால் அனைத்து பகுதிகளும் செழிக்க வேண்டும் என்றும், மாநிலங்கள் கூட்டாளிகளே தவிர யாருக்கும் எதிரிகள் அல்ல என்றும் கூறினார்.
ஒன்றிய அரசின் கொள்கைகள் எப்போதும் செயல்திறனற்ற மாநிலங்களுக்கு சாதகமாக இருக்கக் கூடாது என்றும், மாநிலத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல வேண் டியது அந்தந்த மாநில அரசுகள், அரசியல் கட்சி களின் பொறுப்பு என்றும் தெரிவித்த அவர், பின் தங்கிய மாநிலங்கள் படிப்படியாக தங்களை திருத்திக் கொள்வதுதான் நல்ல அறிகுறி என்றும் தெரிவித்தார்.
