கூகுள் நிறுவனத்திற்கு ரூ.9,500 கோடி அபராதம் விதிப்பு!

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

கூகுள் நிறுவனத்திற்கு அய்ரோப்பிய ஒன்றியம் ரூ.9,500 கோடி அபராதம் விதித்துள்ளது. இந்நிறுவனம், தங்களது கூகுள் பிளே செயலி போட்டியாளர்களைப் பாதிக்கும் வகையில், வாடிக்கையாளர்களை வணிக நெறிமுறைகளுக்கு மாறாக ஈர்த்ததாகக் கூறி, இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிறுவனம்,  முன்னதாக ஆன்ராய்டு இயங்கு தளத்தை வணிக நெறிமுறைகளுக்கு மாறாகப் பயன்படுத்தி ஆதாயம் அடைந்ததாகக் குற்றஞ் சாட்டப்பட்டது. இதையடுத்து, இந்த விதி மீறலுக்காக இந்நிறுவனத்திற்கு ரூ.38,000 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இதற்கு, எதிர்ப்பு தெரிவித்த கூகுள் நிறுவனம், இது போன்ற நடவடிக்கைகள் புதுமையையும், நுகர்வு நலனையும் பாதிக்கும் எனத் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், கூகுள் நிறுவனத்தின் தற்போதைய விதி மீறிய செயல்பாடுகளைக் கண்டித்து அய்ரோப்பிய ஒன்றியம் ரூ.9,500  கோடி அபராதம் விதித்துள்ளது. அமெரிக்காவின் விமர்சனங்கள் மற்றும் அரசியல் அழுத்தங்களைப் பொருட்படுத்தாமல் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது போட்டியாளர்களை ஒடுக்கு வதைத் தடுப்பதில் அய்ரோப்பிய ஒன்றியம் உறுதியாக இருப்பதை இந்த நடைமுறை தெளிவுபடுத்துவதாகக் கூறப்படுகிறது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *