ஜெனீவா, பிப். 10- 10 முக்கிய நாடுகளின் ஜிடிபி கடன் விகிதம் வளர்ந்த நாடாக இருந்தாலும் வளரும் நாடாக இருந் தாலும் பல்வேறு வகைகளில் கடன் வாங்குகின்றன. கடன் பெறுவதற்கு ஒவ்வொரு நாடும் ஒரு அளவுகோல் வைத்துள்ளது. அதாவது தங்கள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) இவ்வளவு சதவீதம் கடன் வாங்கலாம் என ஒரு கணக்கு உள்ளது. உதாரணமாக இந்தியா ஜிடிபி மதிப்பில் 81 சதவீதம் கடன் பெற்றுள்ளது..
இந்தியாவின்
கடன் விகிதம்
கடன் விகிதம்
உலகின் முன்னணி நாடுகளின் பொருளாதார நிலை மற்றும் அவற்றின் கடன் வாங்கும் திறன் குறித்த புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. பன்னாட்டு நாணய நிதியம் (அய்எம்எப்) வழங்கிய தரவுகளின் அடிப்படையில், நாடு களின் கடன் மற்றும் அவற்றின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) விகிதப் பட்டியலில் ஜப்பான் 227 சதவீதம் கடன் விகிதத்துடன் உலகிலேயே அதிக கடன் சுமை கொண்ட நாடாகத் திகழ்கிறது. இந்தியாவின் கடன் விகிதம் 81 சதவீதம் ஆக உள்ளது.
வளர்ந்த நாடுகள்
சிங்கப்பூர் (176%), இத்தாலி (138%) மற்றும் அமெரிக்கா (129%) ஆகிய நாடுகள் மிக அதிக கடன் விகிதத்தைக் கொண் டுள்ளன.
குறைந்த கடன் விகிதம்
இந்தப் பட்டியலில் ஜெர்மனி 66% விகிதத் துடன் மிகவும் கட் டுக்கோப்பான பொரு ளாதாரக் கொள்கையைக் கொண்ட நாடாகத் தெரிகிறது.
வரிசைப் பட்டியல்: நாடு கடன் விகிதம்
ஜப்பான் 227%, சிங்கப்பூர் 176%, இத்தாலி 138%, அமெரிக்கா 129%, பிரான்ஸ் 120%, இங்கிலாந்து 105%, ஸ்பெயின் 99%, இந்தியா 81%, இஸ்ரேல் 70%, ஜெர்மனி 66%
குறிப்பு
ஒரு நாட்டின் கடன் விகிதம் அதிகமாக இருப்பது எப்போதும் அந்த நாடு பொருளாதார நெருக்கடியில் இருப்பதைக் குறிக்காது. மாறாக, அந்த நாடு முதலீடுகளுக்காகவும் வளர்ச்சித் திட்டங்களுக் காகவும் எவ்வளவு கடன் பெற்றுள்ளது என்பதையே இது காட்டுகிறது.
