சைதாப்பேட்டை தொகுதியில் 158 நரிக்குறவர் குடும்பங்கள் உட்பட 299 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, பிப். 10- சென்னை சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் நரிக்குறவர் இன மக்கள் மற்றும் விளிம்புநிலை மக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று, அவர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (9.2.2026) வழங்கினார்.

வருவாய்த்துறை சார்பில் கிண்டி வட்டம், கோட்டூர்புரம் ஜிப்ஸ் காலனி, அரசுப் பண்ணை மற்றும் மடுவன்கரை சமுதாய கூடம் ஆகிய இடங்களில் இந்த பட்டா வழங்கும் விழாக்கள் நடைபெற்றன.

பயனாளிகள்: 158 நரிக்குறவர் இனப் பயனாளிகள் உட்பட மொத்தம் 299 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா ஆணைகள் வழங்கப்பட்டன.

பட்டாக்களை வழங்கிய பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்தத் திட்டத்தின் பின்னணி குறித்துப் பகிர்ந்துகொண்டார்:  “பொருளாதாரத்தில் பின்தங்கிய பழங்குடியின மக்களின் நலனுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனி கவனம் செலுத்தி வருகிறார்.

அதன் ஒரு பகுதியாகவே, 18 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் தடையின்மைச் சான்று பெறப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது 1980ஆம் ஆண்டிலேயே இந்தப் பகுதி மக்களுக்கு வாக்குரிமை பெற்றுத்தர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

முன்பு குடிசை வீடுகளாக இருந்தபோது அடிக்கடி ஏற்பட்ட தீ விபத்துகளைத் தடுக்க, அவர்களுக்கு ஓடு வேய்ந்த வீடுகள் கட்டித் தரப்பட்டன. அதன் தொடர்ச்சியாக தற்போது நிரந்தர இருப்பிடத்திற்கான பட்டா வழங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *