“நண்பன் இனி நண்பன் இல்லை” இந்திய – அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தால் பாதிப்பு ஜெய்ராம் ரமேஷ் காட்டம்!

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, பிப். 9- இந்திய – அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்து ஒன்றிய அரசைச் சாடி, காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடியின் அமெரிக்கப் பயணம் இந்தியாவுக்குப் பாதகமாக முடிந்துள்ளதாகவும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் கரங்களே ஓங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஒப்பந்தத்தால் இந்தியா சந்திக்கப் போகும் 5 முக்கிய பாதிப்புகளை அவர் பின்வருமாறு பட்டியலிட்டுள்ளார்:

ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதிக்குத் தடை

இந்தியா இனி ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாத சூழல் உருவாகியுள்ளது. ஒருவேளை இந்தியா நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கினால், 25 சதவீதம் அபராதம் மீண்டும் விதிக்கப்படலாம் என அமெரிக்கா எச்சரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளின் நலன் பாதிப்பு

அமெரிக்க விவசாயிகளுக்குப் பயனளிக்கும் வகையில், இந்தியா தனது இறக்குமதி வரிகளைக் குறைக்க ஒப்புக்கொண்டுள்ளது. இது இந்திய விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பலிகொடுக்கும் செயலாக அமையும் என அவர் எச்சரித்துள்ளார்.

வர்த்தக உபரி இழப்பு

அமெரிக்காவிலிருந்து இந்தியா செய்யும் இறக்குமதிகள் மூன்று மடங்காக உயரும். இதன் விளைவாக, நீண்டகாலமாக இந்தியா பெற்று வந்த வர்த்தக உபரி (Trade Surplus) நிலை மாறி, வர்த்தகப் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது.

அய்டி துறையில் நிச்சயமற்ற நிலை

அமெரிக்காவிற்கு இந்தியாவின் தகவல் தொழில்நுட்பம் (அய்டி) மற்றும் பிற சேவைகளின் ஏற்றுமதி விசயத்தில் நிலவும் நிச்சயமற்ற சூழல் தொடர்ந்து நீடிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்றுமதி பொருட்களுக்கு கூடுதல் வரி

இந்தியா அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு முன்பை விட அதிக வரிகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியுள்ளது.

“பிரதமர் மோடி மேற்கொண்ட முயற்சிகள் பெரிய அளவில் பலனளிக்கவில்லை. மோடியின் அமெரிக்கப் பயணத்தைவிட, டிரம்ப்பின் இந்தியப் பயணமே வெற்றி பெற்றுவிட்டது. மொத்தத்தில், ரஷ்யா என்ற நண்பன் இனி நண்பன் இல்லை என்பது தெளிவாகிவிட்டது.” — ஜெய்ராம் ரமேஷ்

பிரதமர் மோடியின் வெளியுறவுக் கொள்கை இந்தியாவின் பொருளாதார நலன்களைக் காக்கத் தவறிவிட்டதாக காங்கிரஸ் தரப்பில் முன்வைக்கப்படும் இந்த விமர்சனம் தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *