இதுதான் பிஜேபி அரசு உத்தரப் பிரதேச மகர மேளாவில் பெண் துறவிகள்மீது தாக்குதல் உத்தரப்பிரதேசக் காவல்துறைக்கு மகளிர் ஆணையம் தாக்கீது

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

பிரயாக்ராஜ், பிப்.9 உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகர கும்பமேளா வில் (மகர மேளா) பெண் துறவிகள் தாக்கப்பட்டதாகத் தகவல் வெளியானதைத் தொடர்ந்து, உத்தரப்பிரதேச காவல் துறைக்கு தேசிய மகளிர் ஆணையம் தாக்கீது அனுப்பி உள்ளது.

மகர மேளா

உத்தரபிரதேச பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் மகர மேளா நடைபெற்று வருகிறது. இங்கு கடந்த மவுனி அமாவாசை தினத்தில் ‘புனித’ குளியலின் போது உத்தராகண்டின் ஜோதிஷ்வர் பீடத்தின் சங்கராச்சாரியார்  அவிமுக்தேஷ்வரானந்தாவும் ‘புனித’ நீராட கிளம்பினாராம்!

அப்போது பல்லக்கில் சென்ற வரை இறங்கி நடந்து செல்லுமாறு நிர்வாகம் வலியுறுத் தியது. சங்கராச்சாரியார் பட்டம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அந்த உத்தரவு பிறப் பிக்கப்பட்டதாக காவல் துறையினர் கூறினர். இதனால் காவலர்களுக்கும் சங்கராச்சாரி யாரின் பக்தர்களுக்கும் இடையே வாக்குவாதமும் மோதலும் நிகழ்ந்தன.

பெண் துறவிகள்மீது
தாக்குதல்

அதில், சங்கராச்சாரியாரின் பக்தர்கள் மற்றும் பெண் துறவிகளும் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. சுமார் 20 பெண் துறவிகள் மீது காவல் துறையினர் தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்தது. காயம் அடைந்த சிலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர்.பாதிக்கப் பட்ட பெண் துறவிகளில் பூஜா (40), ஜெய்தேவி (பாண்டே) (50), அர்ச்சனா தேவி (61), மம்தா பரோஹா (60), கமலா (பரத்வாஜ்) (60), ஜோதி கார்க்(39), ஸ்வேதா (சுக்லா) (25) ஆகியோர் முக்கியமானவர்கள்.

இதுதொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்ற வழக்குரைஞர் டாக்டர் கஜேந்திர சிங் தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் செய்தார்.

இதையடுத்து, பெண் துறவிகள் தாக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று பிரயாக்ராஜ் காவல் துறை ஆணையருக்கு மகளிர் ஆணையம் தாக்கீது அனுப்பி உள்ளது.

அதில், 30 நாள்களுக்குள் நடவடிக்கை எடுத்து பதில் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.முன்னதாக உத்தரப்பிரதேச காவல் துறையினர் மீது நடவடிக்கை கோரி சங்கராச்சாரியாரும் மகர மேளாவில் மறியல் போராட்டம் நடத்தி னார். எந்த நடவடிக்கையும் எடுக்காத தால் அடுத்து வந்த புனிதக் குளியல் களையும் புறக்கணித்து விட்டு சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வர் மகர மேளாவில் இருந்து வெளி யேறினார்.

சமூகவலைதளத்தில் பரவும் காணொலியில் பெண் துறவிகளை காவல்துறையினர் மற்றும் ஹிந்து அமைப்பினர் தலைமுடியைப் பிடித்து இழுத்து அவர்கள் தரதரவென இழுத்துச் செல்லப்படுவதும் கம்பு மற்றும் ஆயுதம் கொண்டு தாக்குவதும் பதிவாகி உள்ளது.

இந்தத் தாக்குதல் தொடர்பான காட்சிப் பதிவுகள் சமூக வலைதளங் களில் பரவி, பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *