டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* அல்வா, முட்டை தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசின் பட்ஜெட்: தெறிக்கவிடும் தி.மு.க.வின் போஸ்டர்கள். ‘கோழி முட்டை’ படத்துடன் பளிச்சிடும் அந்த போஸ்டர்களில், தமிழ்நாட்டுக்கு ஒதுக்கிய நிதி ‘முட்டை’ என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பா.ஜ.க. – அ.தி.மு.க. தேர்தல் கூட்டணியின்போது ஒன்றிய அரசு 2026 பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கிய நிதி இதுதான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமான வரி பாக்கியை வட்டியுடன் செலுத்தாவிட்டால் சொத்துக்கள் ஏலம் விடப்படும் – சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தெரிவித்தது.
* தெலங்கானா முனிசிபல் தேர்தலில் காங்கிரஸ், பி.ஆர்.எஸ், பா.ஜ.க. கட்சிகள் சார்பில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக பிற்படுத்தப் பட்டோருக்கு வாய்ப்பு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* குடியரசுத் தலைவரின் உரைக்கு மக்களவையில் பிரதமர் மோடி பதிலளிக்காதது சபையின் விதிகளை மீறிய செயல் மற்றும் “கடுமையான நடைமுறை முறைகேடுகள்” என்று கூறி, காங்கிரஸ் கட்சி மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளது.
தி இந்து:
* மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை மீட்டெடுக்க கேரள சட்டமன்ற தீர்மானம் நிறைவேற்றியது: புதிய விபி-ஜி ராம் ஜி திட்டத்தின் கீழ் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் உரிமை அடிப்படையிலான அணுகுமுறை மறைந்துவிட்டது; மாநிலமும் கூடுதலாக ₹3,500 கோடி சுமையை ஏற்க வேண்டியிருக்கும் என்று அந்தத் தீர்மானம் கூறுகிறது;
* பிரதமர் மோடியைத் தாக்க எதிர்க்கட்சி பெண் எம்.பி.க்கள் திட்டமிட்டிருந்ததால், பிரதமரை வர வேண்டாம் என நான் கேட்டுக் கொண்டேன் என்கிறார் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா.
* அவையில் 3 பெண் எம்.பி.க்கள் இருக்கைக்கு முன் நின்றதால், உள்ளே வர பிரதமர் மோடிக்கு துணிச்சல் இல்லை. மக்களவைத் தலைவர் பின்னால் ஒளிந்து கொண்டு, எதிர்க்கட்சி எம்பிக்கள் தாக்க முயற்சி என அபத்தமாக கூறுவதா? பிரச்சனைகள் குறித்து விவாதிக்க அரசு விரும்பவில்லை என்பதே உண்மை – காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி
டைம்ஸ் ஆப் இந்தியா:
* ‘உண்மைக்கு அஞ்சி, பொய்களில் தஞ்சம் புகுந்தார்’: பிரதமர் மோடியின் மாநிலங்களவை உரைக்கு ராகுல் காந்தி பதில். பிரதமர் மோடியின் உரைக்குப் பிறகு, காங்கிரஸ் தலைவர் எக்ஸ் தளத்தில், “சில கேள்விகளுக்கே இவ்வளவு பதற்றமா? மோடி ஜி, உண்மைக்கு மிகவும் அஞ்சி, பொய்களில் தஞ்சம் புகுந்து விட்டார்” என்று பதிவிட்டுள்ளார்.
– குடந்தை கருணா
