பிரதமரின் சொந்த மாநிலத்தில் இந்த அவலம்!

3 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

குஜராத் மாநிலம் பதான் மாவட்டத்தில் உள்ள சந்துருமானா கிராமத்தில், திருமண ஊர்வலத்தின் போது குதிரையில் சென்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மணமகன் மற்றும் அவரது உறவினர்கள் மீது ஆதிக்க ஜாதியினர் கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

திங்கள்கிழமை அன்று (2.2.2026) தாழ்த்தப்பட்ட சமூக இளைஞரான விஷால் சாவ்தாவின் திருமண ஊர்வலம்  மேளதாளங்களுடன் கிராமத்தின் வீதிகளில் சென்றது. மணமகன் குதிரையில் அமர்ந்து ஊர்வலமாகச் சென்றதைக் கண்ட அப்பகுதியின் ஆதிக்கச் சமூகத்தைச் சேர்ந்த ஒரு கும்பல், ஊர்வலத்தை இடைமறித்து ‘‘தாழ்த்தப்பட்டவன் எப்படி எங்கள் கிராமத்தில் குதிரை மீது அமர்ந்து செல்லலாம்?” என்று கூறி, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்;  கையில் வைத்திருந்த வாள்களைக் காட்டி மிரட்டியுள்ளனர். ஒருகட்டத்தில் வன்முறை வெடிக்கவே, மணமகனை குதிரையிலிருந்து கீழே தள்ளியதோடு, திருமணத்தில் கலந்து கொண்டவர் களையும் கடுமையாகத் தாக்கியுள்ளனர். (படம் அருகே காண்க)

குஜராத்தில் தாழ்த்தப்பட்ட சமூக மணமகன்கள் குதிரை ஏறுவதற்கு எதிராக நடத்தப்படும் வன்முறை இது முதல் முறையல்ல; இதே மாவட்டத்தில் கடந்த ஆண்டு வெவ்வேறு வகையான 5 நிகழ்வுகள் இதே போன்று நிகழ்ந்துள்ளன.

2020: குதிரையில் ஏறிச் சென்றதற்காக ஒரு ராணுவ வீரரின் திருமண ஊர்வலத்தின் மீது கற்கள் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது.

பிப்ரவரி 2024: காந்திநகரின் சடாசனா கிராமத்தில் விகாஸ் சாவ்தா என்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மணமகன் குதிரையிலிருந்து கீழே தள்ளப்பட்டு,  ஆடைகள் அவிழ்த்து விடப்பட்டு அவமானப்படுத்தப்பட்டார்.

‘தாழ்த்தப்பட்ட பழங்குடியின வன்கொடுமை தடுப்புச்சட்டம்’ அமலில் இருந்தாலும், குஜராத் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் ‘தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் அடிமைகள்’ என்று கூறி அவர்கள் குதிரை ஏறுவது, பொது இடங்களில் தண்ணீர் குடிப்பது உள்ளிட்டவற்றிற்கு தடை செய்துள்ளனர்.

2.2.2026 அன்று நடந்த ஊர்வலத்தில் மணமகன் தாக்குதல் சம்பவம் தொடர்பாக உள்ளூர் காவல்துறை முதல் தகவல் அறிக்கை (எஃப்.அய்.ஆர்.) பதிவு செய்துள்ளது. கிராமத்தில் மீண்டும் பதற்றம் ஏற்படாமல் இருக்கக் கூடுதல் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்தியா தன்னை ஒரு உலகளாவிய தொழில் நுட்பத் தலைவராகவும், முற்போக்கான வல்லரசாகவும் முன்னிறுத்துவதில் மட்டும் குறைச்சல் இல்லை! குஜராத்தின் பதான் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம், நாட்டின் கிராமப்புறங்களில் இன்றும் நீடித்து வரும் ஆழமான ஜாதியப் பிளவுகளின் வன்மங்கள் வெட்கப்பட்டத்தக்கவை!

புள்ளிவிவரம் கணக்கெடுக்க வந்த அதிகாரி தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்று தெரிந்தததும் அவரை வீட்டிலிருந்து வெளியே தள்ளி விட்டதும்,  தாகமாக இருக்கிறதென்று உயர்ஜாதியினர் குடிக்கும் பானையில் தண்ணீர் குடித்த  13 வயது சிறுவனை தலைமை ஆசிரியரே அடித்துக் கொலை செய்த நிகழ்வுகளும் இதே குஜராத்தில்தான் அரங்கேறியுள்ளன.

தமிழ்நாட்டில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆணவப் படுகொலை நடந்தால் (அதுகூட நடக்கக் கூடாது என்பதுதான் நமது நிலைப்பாடும், ‘திராவிட மாடல்’ அரசின் குறிக்கோளும் ஆகும்) அரசியல் லாபத்தினைப் பெற போர்க்குரல் கொடுக்கும் வலதுசாரிகளும், அவர்களின் ஊடகங்களும், அதைப் பெரிதுபடுத்தி எக்காளமிடுகின்றன.

ஆனால், பிரதமர் மோடியின் சொந்த மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மணமகன் குதிரை மேல் அமர்ந்து ஊர்வலமாக வந்தார் என்பதாக, வாள் கொண்டு வீசும் அளவுக்கு ஜாதிவெறி தலைக் கொழுத்துக் கூத்தாடுகிறது!

‘மீசை வைத்திருந்தார்’ என்பதற்காகவும், ‘கோயில் திருவிழாவை வேடிக்கை பார்த்தார்’ என்பதற்காகவும் தாழ்த்தப்பட்டவர்கள் அடித்துக் கொல்லப்படும் கொடூரம்் பிஜேபி ஆளும் மாநிலங்களில் (இரட்டை என்ஜின் ஆட்சி) நடப்பது தலை குனிந்து வெட்கப்படத்தக்கதல்லவா!

வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்ப தெல்லாம் – அந்த ஒரு நாள் செய்தியோடு சரி –அதற்குப் பின் மூடு விழாதான்! ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் தலைதெறித்து ஆடிக் கொண்டிருக்கும் வரை இவற்றிற்கெல்லாம் முடிவைக்கான முடியாது! தேவை மக்களிடம் விழிப்புணர்வு!

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *