மறைவு
திருவாரூர் மாவட்டம், குடவாசல் ஒன்றியம் மஞ்சக்குடி ராஜேந்திரன் தலைமை ஆசிரியர் (ஓய்வு) அவர்களது இளைய சகோதரரும், ‘விடுதலை’ அலுவலக மேனாள் பணித் தோழருமான ரவிச்சந்திரன் (வயது 56) உடல்நலக்குறைவால் மதுரையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (1.2.2026) மாலை மறைவுற்றார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது இறுதி நிகழ்வு இன்று (02.02.2026) மஞ்சக்குடி அவர்களது இல்லத்தில் நடைபெற்றது. திருவாரூர் மாவட்ட கழகத் தலைவர் எஸ்.எஸ்.எம்.அருண்காந்தி தலைமையில் கழகத் தோழர்கள் கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தனர்.
– – – – –

கீழப்பாவூர் தந்தை பெரியார் குருதி, விழி, மற்றும் உடற்கொடை கழக நிறுவனர் அய். இராமச்சந்திரன் அவர்களின் தந்தை .ஆ.அய்யங்கண்ணு இன்று (2.2.2026) காலை 6 மணியளவில் மறைவுற்றார். அவர்களது இரு விழிகளும் திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு கொடையாக வழங்கப்பட்டன. கழகத் தோழர்கள் திரண்டு வந்து இறுதி மரியாதை செலுத்தினர். 3.2.2026 அன்று காலை 9 மணி அளவில் கீழப்பாவூரில் உள்ள அவரது இல்லத்திலிருந்து இறுதி ஊர்வலமாக புறப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவரது உடல் கொடையாக வழங்கப்படும்.
