மகத்தான மனிதநேயம்! விபத்தில் மூளைச்சாவு அடைந்த சிறுவனின் உடல் உறுப்புகள் கொடை! 6 பேருக்கு மறுவாழ்வு

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

திருச்சி, ஜன.29- விபத்தில் மூளைச்சாவு அடைந்த சிறுவனின் உடல் உறுப்புகள் கொடையாக வழங்கப்பட்டு, 6 பேருக்கு பொருத்தப் பட்டது.

சாலை விபத்து

திண்டுக்கல் மாவட்டம் பாம்பலூரை சேர்ந்த 14 வயதுடைய சிறுவன் கடந்த 14ஆம் தேதி சாலை விபத்தில் படுகாயம் அடைந்தார். அவரது மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் திருச்சி மகாத்மாகாந்தி அரசு மருத்துவமனையில் கடந்த 22ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாமல், ஓரிரு நாள்களுக்கு முன் மூளைச்சாவு ஏற்பட்டது.

இதையடுத்து அவரது உறவினர்கள் அவருடைய உடல் உறுப்புகளை கொடை அளிக்க முன்வந்தனர். தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, அவருடைய உறுப்புக்களான கல்லீரல், கணையம், சிறுகுடல், 2 சிறுநீரகங்கள், கண்கள் மற்றும் தோல் கொடையாகப் பெறப்பட்டது.

உடல் உறுப்புகள் கொடை

உடல் உறுப்பு வேண்டி பதிவு செய்தவர்களின் வரிசையின்படி, ஒரு சிறுநீரகம் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கும், மற்றொரு சிறுநீரகம் திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கும், கல்லீரல் மதுரையில் உள்ள தனி யார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவருக்கும், கணையம் மற்றும் சிறுகுடல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவருக்கும், கண்கள் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபருக்கும், தோல் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபருக்கும் கொடையாக வழங்கப்பட்டது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *