தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு சேவை செய்யாத ஆளுநர் தேவையில்லை

1 Min Read

தஞ்சை, டிச.15 தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரில் அமைச்சர் கோவி.செழியன் நேற்று (14.12.2025) அளித்த பேட்டி: இந்திய அளவில் தமிழ்நாடு தனிமனித வருமான வளர்ச்சியில் 16.5 சதவீதம் என்ற இரட்டை இலக்கத்தை எட்டியுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. முதலமைச்சரின் சிறப்பான ஆட்சியால் தான் இது நிகழ்ந்துள்ளது. இதுவே இந்த ஆட்சியின் நான்கரை ஆண்டு சாதனையாகும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைய தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு வகைகளில் மக்களின் தேவையை உணர்ந்து செயல்பட்டு வருகிறார்.

‘ஆட்டுக்கு தாடி தேவையில்லை. அதே போன்று தமிழ்நாட்டுக்கு ஆளுநர் தேவை இல்லை’ என்று அறிஞர் அண்ணா கூறினார். நாட்டின் வளர்ச்சிக்காக ஆளுநர் செயல்பட வேண்டும். மாநில அரசின் கோரிக்கைகளை ஒன்றிய அரசிடம் கொண்டு சேர்த்து பணியாற்ற வேண்டும். ஆனால், தற்போது இருக்கக்கூடிய ஆளுநர் ரவி, ஆர்எஸ்எஸ் ரவியாக செயல்பட்டு வருகிறார். இதன் எதிரொலியாகவே நமது அரசு கொண்டு வரும் தீர்மானங்களையும், கோரிக்கைகளையும் புறக்கணித்து வருகிறார். நாட்டின் வளர்ச்சிக்கு சேவை செய்யாத ஆளுநர் ரவி தேவையில்லை என்றார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *