திருப்பரங்குன்றம் மலையில் இருப்பது தீபத்தூண் அல்ல, ‘நில அளவைக் கல்லே’ மதுரை உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞர் வாதம்

3 Min Read

மதுரை, டிச.13 திருப்பரங்குன்றம் மலையில் உள்ள ‘தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண் டும்’ என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கடந்த 1-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக திருப்பரங்குன்றம் கோவில் செயல் அலுவலர் சார்பிலும், மதுரை மாவட்ட ஆட்சியர் சார்பிலும் தனித்தனியாக மதுரை உயர்நீதிமன்ற அமர்வில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

திருப்பரங்குன்ற பிரச்சினை

இதில் இந்து அமைப்புகளை சேர்ந்த ராம ரவிக்குமார், சோலைக் கண்ணன் சார்பில் வழக்குரைஞர்கள் அருண்சுவாமிநாதன், நிரஞ்சன் எஸ்.குமார் ஆகியோர் கேவியட் மனு தாக்கல் செய்தனர். மேலும் சில மனுக்களும் இந்த விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன.

இந்த மனுக்கள் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே.ராம கிருஷ்ணன் அடங்கிய அமர்வில் இன்று நேற்று (12.12.2025) விசா ரணைக்கு வந்தது. அப்போது திருப்பரங்குன்றம் மலை தீப விவகாரம் தொடர்பாக இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்ய நீதிபதிகள் அனுமதி மறுத்தனர். மேலும் ‘உண்மையிலேயே பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்றால் அமைதியாக இருங்கள்’ என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

பின்னர் அரசுத் தரப்பில் வாதாடிய வழக்குரைஞர், மலை உச்சியில் தீபம் ஏற்ற கோயில் நிர்வாகம்தான் அனுமதி வழங்க வேண்டும். தீபம் ஏற்ற உத்தரவிட்ட இடத்துக்கு அருகே தர்கா உள்ளது. வழக்கமாக தீபம் ஏற்றப்படும் நடைமுறையே இந்த ஆண்டும் பின் பற்றப்பட்டது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ளது தீபத் தூண் அல்ல; அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. 73 ஆண்டுகளாக உச்சிப் பிள்ளையார் கோவில் மண்டபத் திலேயே கார்த்திகை தீபம் ஏற்றப் பட்டது. எந்த பிரச்சினையும் இல்லை. 1994-இல் இருந்துதான் பிரச்சினை ஏற்பட்டது, தீபம் ஏற்றுவது குறித்து பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. 2014-இல் விரிவான தீர்ப்புகள் வந்துள்ளன என்று வாதிட்டார்.

நில அளவை கல்

அப்போது குறுக்கீட்ட நீதிபதிகள் “திருப்பரங்குன்றம் தூண் சர்வே தூண் தானா என்று உறுதி செய்து உள்ளீர்களா? என கேள்வி எழுப்பினர். அதற்கு அரசு தரப்பு வக்கீல், “மலை உச்சியில் உள்ளது சர்வே தூண் தான். மலையில், நெல்லித்தோப்பு, தர்கா உள்ளிட்டவை தர்காவிற்கு சொந்தமானது; மற்றவை கோவில் நிர்வாகத்திற்கு சொந்தமானது” என்று தெரிவித்தார்.

பின்னர் அரசுத் தரப்பில் “பொது அமைதியை நிலைநாட்டுவதே அரசின் முக்கியப் பணி. தீபம் எங்கே ஏற்ற வேண்டும் என்பதை கோவில் நிர்வாகம்தான் முடிவு செய்ய முடியும். தர்கா அருகில் உள்ள தூணில்தான் தீபம் ஏற்ற வேண்டும் என்ற மனு ஏற்ெகனவே இரண்டு நீதிபதிகள் அமர்வில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

அந்தக் கல் அமைப்பு, ஒரு தீபத்தூணா? என்பது அடிப்படைக் கேள்வி. குறைந்தபட்சம், ஏதோ ஒரு கால கட்டத்தில், அங்கு தீபம் ஏற்றியதற்கான, ஏற்கத்தக்க ஆதாரங்கள் சமர்ப்பித்திருந்தால் அதைத் தீபத்தூண் என்று ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால் தனி நீதிபதி முன்பு ஒரு துண்டுச் சீட்டு கூட, ஆதாரமாக சமர்ப்பிக்கப்பட வில்லை.

ஆகம விதிகளுக்கு எதிராக கோயில் நிர்வாகம் செயல்பட முடியாது. தர்கா அருகே கார்த் திகை தீபம் ஏற்றக் கூறுவது தேவையில்லாத பிரச்சினையை உருவாக்கும். தேவையில்லாமல் மாற்றிடத்தில் தீபம் ஏற்றக்கூடாது என்று ஏற்ெகனவே உத்தரவு உள்ளது. எனவே திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டதை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *