புதிய சட்டத்தின்படி நாடு முழுவதும் 5.17 லட்சம் வக்ஃபு சொத்துகள் பதிவு

2 Min Read

புதுடில்லி, டிச.9 நாடாளுமன் றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத்தின்படி, தமிழ்நாட்டில் 8,252, புதுச்சேரியில் 620 உட்பட நாடு முழுவதும் 5.17 லட்சம் வக்பு சொத்துகள் முறைப்படி பதிவு செய்யப்பட்டுள்ளன.

வக்ஃபு சொத்துகள்

முஸ்லிம் மத நோக்கங்கள், தொண்டு நோக்கங்களுக்காக நன்கொடையாக வழங்கப்படும் அசையும், அசையா சொத்துகள் ‘வக்ஃபு’ என்று அழைக்கப்படுகிறது. இந்த சொத்துகளை நிர்வகிக்க கடந்த 1954-ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் வக்ஃபு சட்டம் நிறைவேற்றப்பட்டது. கடந்த 1995-ஆம் ஆண்டில் வக்ஃபு சட்டத்தில் புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டன.

இந்த சூழலில் வக்ஃபு சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டு கடந்த ஏப்ரலில் நாடாளுமன்றத்தின் 2 அவைகளிலும் வக்ஃபு சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டன. அதன்படி, நாடுமுழுவதும் உள்ள வக்ஃபு சொத்துகளை பதிவு செய்ய ‘உமீத்’ என்ற இணையதளம் கடந்த ஜூன் மாதம் தொடங்கப்பட்டது. 6 மாதங்களில் அனைத்து வக்ஃபு சொத்துகளையும் இணையத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று ஒன்றிய அரசு அறிவுறுத்தியது. இதன்படி டிசம்பர் 6-ஆம் தேதியுடன் 6 மாத அவகாசம் நிறைவடைந்தது.

5.17 லட்சம் சொத்துகள்

இந்நிலையில், ஒன்றிய சிறு பான்மையினர் நலத் துறை சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: தற்போதைய புள்ளிவிவரங்களின்படி நாடு முழுவதும் 5.17 லட்சம் வக்ஃபு சொத்துகள் உமீத் தளத்தில் முறைப்படி பதிவு செய்யப்பட்டுள்ளன. 2.17 லட்சம் சொத்துகள் அங்கீகரிக்கப் பட்டுள்ளன. 2.14 லட்சம் சொத்துகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு கட்ட ஆய்வுகளின்போது 10,869 சொத்து பதிவுகள் நிராகரிக் கப்பட்டுள்ளன.

அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத் தில் 86,345 வக்ஃபு சொத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்கு அடுத்து மகாராட்டிராவில் 62,939, கருநாடகாவில் 58,328, தெலங்கானாவில் 46,480, கேரளாவில் 42,772 வக்ஃபு சொத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 8,252 சொத்துகள் புதுச்சேரியில் 620 வக்ஃபு சொத்துகள் உமீத் தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வக்ஃபு சொத்துகளை பதிவு செய்ய கால நீட்டிப்பு வழங்கப்படாது. எனினும் இதுவரை பதிவு செய்யப்படாத வக்ஃபு சொத்துகள் குறித்து வக்ஃபு தீர்ப்பாயத்தை அணுகி நிவாரணம் பெறலாம். நியாயமான காரணங்கள் இருந்தால் 6 மாதங்கள் வரை அவகாசம் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *