தமிழர் தலைவர் ஆசிரியர் 93ஆவது பிறந்த நாள் தலைவர்கள் வாழ்த்து!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

நம் கொள்கை ஆசிரியர்!
அமைச்சர் கே.என்.நேரு

தமிழ்ச் சமுதாயம் எழுச்சியுடன் வாழ வேண்டும் என்ற பெரியாரின் சிந்தனையை நாள்தோறும் விதைத்து வரும் ஆசிரியர் அண்ணன் கி. வீரமணி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

பத்து வயது முதலே பெரியாரின் பெருந்தொண்டராக, பகுத்தறிவு – சுயமரியாதை கொள்கை பிடிப்பு கொண்டவராக, சமூக நீதிக் களத்தில் போராடி வரும் ஆசிரியர் அவர்கள் 83 வருட பொது வாழ்க்கைக்கு சொந்தக்காரராவார்! சமூக நீதிக் கொள்கை சார்ந்து நமது அரசு நிறைவேற்றும் அனைத்து சட்ட திட்டங்களுக்கும், சட்டப் போராட்டங்களுக்கும் உறுதுணையாய் – வழிகாட்டியாய் இருந்து வரும் நம் மானமிகு ஆசிரியர் அவர்களின் சமூகப் பணி என்றுமே போற்றுதலுக்குரியது.

தமிழினத்தின் அரணான பெரியாரிய கருத்துக்களை நாள்தோறும் முழங்கி வரும் நம் கொள்கை ஆசிரியராம் அண்ணன் கி.வீரமணி அவர்கள் இன்று போல் என்றும் நலமுடன் வாழ இந்நாளில் வாழ்த்தி மகிழ்கிறோம்..!

 

ஆசிரியருடன் கரம் கோப்பது நம் கடமை!
‘மக்கள் நீதி மய்யம்’ தலைவர் கமலஹாசன் எம்.பி.

வாழ்த்து

முன்னெப்போதையும்விட, தந்தை பெரியாரின் தேவை மிகுந்திருக்கும் சமூகச் சூழல் இன்று நிலவுகிறது.
பெரியாரின் சொற்களைப் பரப்புவதே வாழ்நாள் பணியாகக் கொண்டு இயங்கும் மானமிகு ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பிறந்த நாள் இன்று. அவரை வாழ்த்துவதோடு, அவர்தம் வாழ்நாள் பணியில் கரம்கோப்பதும்கூட நம் அனைவரின் கடமை.
என்னாலானதை நான் செய்யக் காத்திருக்கிறேன். நம்மாலானதை நாம் செய்வோம்.
ஆசிரியர் அவர்கள் வாழிய நீடு, செயலூக்கத்தோடு.

எங்களுக்கு வழிகாட்டும் தலைவர் ஆசிரியர் அய்யா வீரமணி!
ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனர் – தலைவர் இரா.அதியமான்

வாழ்த்து

பெரும்பான்மை மக்களின் மூளைக்கு விலங்கு போட்ட நிலையைத் தனது கைத்தடியால் அடித்து நொறுக்கிய தந்தை பெரியார் அவர்களோடு தன் காலமெல்லாம் உடன் இருந்ததோடு, மட்டுமில்லாமல் அவருக்கான அத்தனை உதவிகளையும் செய்து வந்ததோடு, இன்று தமிழ்நாட்டிற்கு நல்லது எது கெட்டது எது ஆராய்ந்து தமிழ் மக்களுக்கு அறிவிக்கின்ற ஒரு பல்கலைக்கழகமாக திகழும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு ஆதித்தமிழர் பேரவையினுடைய நெஞ்சம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.
தமிழ்நாட்டுக்கு எது தேவை எது தேவையில்லை என்பதை அறிவதற்கு நாம் அறிந்து கொள்ள பயன்படுத்தும் கருப்புக் கண்ணாடி தந்தை பெரியாரினுடைய வாரிசாக இருந்து இந்த 94 வயதிலும் இந்த மக்களுக்காக வழிகாட்டும் தலைவர் நீடூடி வாழ்க.
நான் கல்வி இறுதியாண்டு படிக்கும் போது ஆசிரியர் அவர்கள் கலந்து கொள்ளும் பல்வேறு கூட்டங்களுக்குச் சென்று அவரது விரிவான பேச்சை நன்கு கேட்டிருக்கிறேன்.
1979இல் ஆசிரியர் தலைமையில் பெரியார் திடலில் திருமணம் மேற்கொண்டேன்.
அன்றிலிருந்து இன்று வரை அவரைத் தொடர்ந்து ஒரு வழிகாட்டியாகப் பாவித்து அதன்படி நடந்தும் வருகிறேன்.
என் மீது நீண்ட அக்கறையும் மிகுந்த அன்பும் கொண்ட தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நான் மனதார நேசிக்கின்றேன் என்பதைப் பேரன்பு நிறைந்த இப்பிறந்தநாளில் ஆதித்தமிழர் பேரவை சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

மக்களுக்காக நின்ற பெரியவர்!

முதலமைச்சர் எம்.ஜி.ஆர் கொண்டு வந்த பிற்படுத்தப்பட்டோருக்கான ஆண்டு ஒன்றுக்கு 9000 ரூபாய் வருமானம் உள்ளவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது என்ற ஆணையை எ(ரி)திர்த்து ஆணையைத் திரும்பப் பெறச் செய்தது – அதன்மூலம் 31 சதவிகித பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்தக் காரணமாக இருந்தது
50 சதவிகிதத்துக்குமேல் இட ஒதுக்கீடு போகக் கூடாது என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பிலிருந்து தமிழ்நாட்டின் 69 விழுக்காடு இடங்களைக் காப்பாற்ற சட்டம் எழுதித் தந்து (31-சி) மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றச் செய்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதலும் பெற்று – நீதிமன்ற குறுக்கீட்டி லிருந்து காப்பாற்ற ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கச் செய்தது. (76 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம்). (முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் பி.வி. நரசிம்மராவ், குடியரசுத் தலைவராக சங்கர் தயாள் சர்மா இருந்த நேரம்.
மக்களுக்காக நின்ற பெரியவர்களில் ஒருவர் ஆசிரியர் கி.வீரமணி பிறந்தநாள் வாழ்த்துகள்!
– மூவேந்தர் முன்னேற்ற கழகத் தகவல் தொழில் நுட்ப அணி

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *