டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* புதிய தொழிலாளர் சட்டம்: தொழிலாளர்களுக்கு விரோதமாகவும், முதலாளிகளுக்கு ஆதரவாக வும் உள்ளது.
* மே.வங்கத்தில் எஸ்அய்ஆரை கண்டித்து பேரணி; பாஜக ஆணையமானது தேர்தல் ஆணையம்: மம்தா கடும் தாக்கு
* எஸ்அய்ஆரை எதிர்த்து வைகோ வழக்கு: தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் அறிவிக்கை
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* வாக்குச் சாவடி நிலை அதிகாரிகளாக ஆர்.எஸ்.எஸ். – பாஜகவினர்: மத்தியப் பிரதேசத்தின் டாடியா மாவட்டத்தில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புடன் தொடர்புடைய பலர் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிரத் திருத்தத்திற்காக (SIR) க்காக வாக்குச் சாவடி நிலை அதிகாரிகளுக்கு உதவியாளர்களாக (BLOS) நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு: “தற்செயலான தவறு” என்று விவரித்து பெயர்களை நீக்கியது நிர்வாகம்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* எல்லைப் பகுதிகளில் எஸ்அய்ஆர் மூலம் சிஏஏவை செயல்படுத்த பாஜக முயற்சிப்பதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா குற்றச்சாட்டு.
தி டெலிகிராப்:
* புதிய தொழிலாளர் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் மாவட்ட தலைமையகங்களில் தொழிற்சங்கங்கள் நடத்தும் ஆர்ப்பாட்டங்களில் விவசாயிகள் கூட்டணியான சம்யுக்த கிசான் மோர்ச்சாவின் துணை அமைப்புகள் கலந்து கொள்கிறார்கள்.
– குடந்தை கருணா
