புதுடில்லி, அக். 8 – பீகாரில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 3.66 லட்சம் வாக்காளர் களின், விவரங்களை வெளியிடுமாறு தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல புதிதாக சேர்க்கப்பட்ட 21 லட்சம் வாக்காளர்களின் விவ ரங்களையும் நாளைக்கு (9.10.2025) வெளியிட வேண்டும் என்று கூறி யுள்ளது.
வாக்காளர் பட்டியல்
பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு (SIR) எதிராக உச்சநீதிமன்றத்தில் தொட ரப்பட்ட வழக்குகள், நீதிபதிகள் சூர்ய காந்த், ஜாய்மால்யா பாக்சி அமர்வு முன்பாக செவ்வாயன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, “பீகார் வாக் காளர் பட்டியலில் இருந்து நீக்கப் பட்டவர்களின் விவரங்கள் முழுமையாக இல்லை, மேலும் அவர்கள் நீக்கப்பட்ட தற்கான காரணமும் அவர்களுக்குத் தெரியப்படுத்தப்படவில்லை, காரணம் தெரிந்தால் மட்டுமே அவர்களால் மேல்முறையீடு செய்ய முடியும்” என்று மூத்த வழக்குரைஞர் அபிஷேக் மனு சிங்வி வாதிட்டார்.
மேலும், ‘65 லட்சம் வாக் காளர்கள் நீக்கப்பட்ட நிலையில் இறுதிப் பட்டியலில் 21 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள் ளனர். இவர்கள் ஏற்கெனவே நீக்கப் பட்டவர்களா? அல்லது புதிதாக சேர்க்கப்பட்டவர்களா? என்பது தெரியவில்லை. ஆனால் இறுதிப் பட்டியல் வெளியிடும்போது மேலும் 3.66 லட்சம் வாக்காளர் நீக்கப்பட்டுள்ளனர்’ என்றும் சிங்வி சுட்டிக்காட்டினார்.
இதையடுத்து, “தேர்தல் என்பது பொதுவான ஜனநாயக நடவடிக்கை. அதில் குழப்பம் எதுவும் இல்லை என்பதை தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்த வேண்டும். அப்போதுதான் தேர்தல் நடவடிக்கை மீதான நம்பிக்கையை ஏற்படுத்த முடியும்” என்ற நீதிபதிகள், “வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டவர்களுக்கு அது குறித்து தெரிவிக்கப்பட்டதா? யாருக் கெல்லாம் தெரிவிக்கப்பட வில்லையோ அவர்கள் மேல்முறை யீடு செய்ய உரிமை உண்டு” என்றனர்.
அத்துடன், பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப் பட்டவர்களின் விவரங்களை நாளைக்குள் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.