புதிய கல்விக் கொள்கை குறித்து விவாதிக்க துணைவேந்தர்கள் கூட்டத்தை கூட்டுவதற்கு ஆளுநருக்கு என்ன உரிமை இருக்கிறது?.. – அமைச்சர் க.பொன்முடி கேள்வி

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

அரசு, தமிழ்நாடு

விழுப்புரம், மே 28 உயர்கல்வி துறை செயலர், அமைச்சருக்கு தெரிவிக்காமல், ஒன்றிய அரசின் புதிய கல்விக்கொள்கை குறித்து விவாதிக்க துணைவேந்தர்கள் கூட்டத்தை கூட்டுவதற்கு ஆளுநருக்கு என்ன உரிமை இருக்கிறது என உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி கேள்வி எழுப்பியுள்ளார். 

விழுப்புரத்தில் நேற்று (27.5.2023) உயர்கல்வி துறை அமைச்சர் க.பொன்முடி அளித்த பேட்டி: அண்ணாமலையின் கருத்துகளுக்கு, நான் பதலளிக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் எனக்கு இருக்கிறது. நேரடியாக விவா திக்க தயார் என்று சொல்லியிருக்கிறார். நானும் தயார் என்று ஏற்கெனவே அறிவித்திருக்கிறேன். சென்னையில் எந்த இடத்தில், எந்த பொதுக்கூட்டத்தில் அவர் எந்த இடத்தில் பேசுவதற்கு தயார் என்கிறாரோ அந்த இடத்திற்கு நான் தயார்.  இந்தியாவின் புதிய கல்விக் கொள்கையை பற்றி பேசுவதற்காக ஜூன் 5ஆம் தேதி கூட்டம் நடைபெறும் என்று துணைவேந்தர்களுக்கு எல்லாம் ஒரு சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறார் ஆளுநர்.

நான் இணைவேந்தர், எனக்கே அது தெரியாது. அது அண்ணாமலைக்கு தெரிந்திருக்கிறது. அவர், அரசுக்கு தெரி யாமல் நடக்கிறதா என்று கேட்கிறார். ஆளுநர் இந்தக் கூட்டத்தை கூட்டியது செயலாளருக்கும் தெரியாது. அமைச் சருக்கும் தெரியாது. தமிழ்நாட்டில் முதலமைச்சர் கல்விக்கொள்கை வகுப்ப தற்காக ஒரு குழுவை நியமித்து அதனு டைய அறிக்கை வரவிருக்கும் நேரத்தில் துணைவேந்தர்களை எல்லாம் அழைத்து புதிய கல்விக் கொள்கை குறித்து விளக்கம் கொடுப்பதற்கு ஒரு வேந்தருக்கு என்ன உரிமை இருக்கிறது. அதுவும் தமிழ்நாடு அரசை கலந்தாலோசிக்காமல், அவர்களுடைய கொள்கைக்கு எதிர்ப்பாக செய்ய முற்படுவது யார். இது எல்லாம் அண்ணாமலைக்கு தெரியாதா? அண்ணாமலை தமிழ் வளர்ச்சி கல்வி மீது அக்கறை உள்ளவராக இருந்தால், ஆளுநரை சந்தித்து இதுகுறித்து விளக்கம் கேட்க வேண்டும். பல மொழிகளை படிப்பதிலே எங்களுக்கு வேறுபட்ட கருத்து கிடையாது.

ஆனால் தேர்வு எழுதுகிறபோது கட்டாய மொழி என்பதை ஏற்க முடி யாது. இரு மொழிதான் இருக்க வேண்டும் என்பது திராவிட மாடல் ஆட்சியின் கொள்கை. புதிய கல்விக் கொள்கையில் சமஸ்கிருதம், ஹிந்தி படித்தால் ஊக்கத்தொகை கொடுக்கப் படும் என்று சொல்லியிருக்கிறார்கள். தமிழுக்கு எந்த சலுகைகளும், முக்கி யத்துவமும் கொடுக்கப்படவில்லை. இவர்களுடைய நோக்கம் எல்லாம் இந்தியை புகுத்த வேண்டும். ஹிந்தி எதிர்ப்புக்காக போராடிய மாநிலம் தமிழ்நாடு. ஏன், தமிழ்நாடு என்று பெயர் வைத்ததே நம்முடைய ஆட்சியில்தான். இந்தளவிற்கு செய்திருக்கிற எங்களை பார்த்து பிஜேபியில் இருக்கிற அண்ணாமலை பேசுவது, சனாதனத் திற்கு ஆதரவாக, தாய்மொழி தமிழுக்கு எதிர்ப்பாக செயல்பட்டு பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. அண்ணா மலை வரலாற்றையும் படிக்க வேண்டும். அரசியலையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

 இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *