ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 4 ஆயிரம் பேராசிரியர்கள் நியமனம் அமைச்சர் முனைவர் க. பொன்முடி தகவல்

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

அரசு, தமிழ்நாடு

சென்னை, மே 31 – டிஆர்பி மூலமாக 4 ஆயிரம் பேராசிரியர்களை நியமனம் செய்ய இருக்கிறோம். நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் கொஞ்சம் தாமதம் ஆகியுள்ளது என்று உயர் கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி தெரிவித்தார்.

அமைச்சர் க.பொன் முடி நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித் தார். அப்போது அவர் கூறியதவது: – 

அரசு கலைக் கல்லூரி களில் சேருவதற்கு நிறைய விண்ணப்பங்கள் வந்து கொண்டிருக்கின்றன.மாணவர்கள் ஆர்வத்துடன் வந்து கொண்டு இருக்கிறார்கள். அதுவும் குறிப்பாக அரசுப் பள்ளி களில் படித்த மானவிக ளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்த தால் மகளிர் சேர்க்கை கல்லூரியில் அதிகரித்து உள்ளது.

உயர் கல்வியை பொருத்த வரை அரசு கலை அறிவி யல் கல்லூரியில் நிறைய மாணவர்கள் படிப்பதற் கான வாய்ப்புகள் கொடுக் கப்பட்டுள்ளன. உயர் கல்வித்துறை பொற்கால மாக மாற வேண்டும் என்ற முதலமைச்சரின் திட்டத்தின் அடிப்படை யில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அரசு கலை கல்லூரிகளில் மாணவ-மாணவிகள் சேருவதற் காக விண்ணப்பிப்பவர்க ளின் எண்ணிக்கை 15 சத விகிதம் அதிகரித்துள் ளது.

டி.ஆர்.பி மூலமாக 4 ஆயிரம் பேராசிரியர் களை நியமனம் செய்ய இருக்கிறோம். நீதிமன்றத் தில் வழக்குகள் கொஞ்சம் நிலுவையில் இருப்ப தால் தாமதம் ஆகியுள் ளது. ஜூன் முதல் வாரத் தில் நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்துவிடும். வந்த பிறகு 4 ஆயிரம் பேர் கல்லூரி களில் எல்லா பேராசிரியர்களும் நியமிக்கப்படுவார்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *