டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* ராகுல் காந்தி வாக்காளர் அதிகார விழிப்புணர்வு பயணம், பீகாரை தொடர்ந்து நாடு முழுவதும் நடத்தப்படும் என ராகுல் எச்சரிக்கை.
* தெலங்கானா உள்ளாட்சி தேர்தலில் பிற்படுத்தப் பட்டோருக்கு 42% இட ஒதுக்கீடு; அமைச்சரவை முடிவு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* பாஜக உயர்மட்ட தலைவர்கள் அனுமதித்தால், அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவை பெற தயாராக இருக்கிறேன்: இந்தியா கூட்டணி குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர் நீதியரசர் சுதர்சன் பேட்டி.
தி இந்து:
* இந்தியா உள்பட உலக நாடுகளுக்கு எதிராக அதிபர் டிரம்ப் விதித்த வரிகள் சட்டவிரோதமானவை என அமெரிக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு
தி டெலிகிராப்:
* ஆம்ஸ்ட்ராங்கை வீழ்த்திய அனுமன்: கட்டுக் கதைகளை உண்மைகளாக விளம்பரப்படுத்துவதற்கு எதிராக வரலாற்றாசிரியர்கள் எச்சரிக்கை
– குடந்தை கருணா