பீகாரில் 65 லட்சம் வாக்காளர்களை நீக்கியது பற்றி பதிலளிக்காமல் மிரட்டுவதா? அரசியலமைப்புச் சட்டக் கடமையில் தேர்தல் ஆணையம் தோல்வி! இந்தியா கூட்டணிக் கட்சிகள் கூட்டாகக் கண்டனம்

3 Min Read

புதுடில்லி, ஆக. 19 – இந்தியாவின் முக்கிய எதிர்க்கட்சிகள் இணைந்து தலைமைத் தேர்தல் ஆணையத்தின் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளன. தேர்தல் ஆணையம் தனது அரசியல மைப்புச் சட்டக் கடமையில் தோல்வி யடைந்துள்ளதாகவும், ஆளும் கட்சியை  எதிர்ப்பவர்களை மிரட்டும் கொள்கையை கடைப்பிடித்து வருவதாகவும் இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் குற்றச்சாட்டுக்களை எழுப்பியுள்ளன.

ஆகஸ்ட் 17, 2025 அன்று ‘புதிய’ தேர்தல் ஆணையம் தனது முதல் செய்தியாளர் கூட்டத்தை நடத்தியது. கிட்டத் தட்ட 90 நிமிடங்கள் நீடித்த இந்த  கூட்டத்தில் முதன்மை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் முக்கிய மாக உரையாற்றினார்.

அப்போது, எதிர்க்கட்சிகளின் குற்றச் சாட்டு அடிப்படையில், ஆகஸ்ட் 14, 2025  அன்று உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவு குறித்து தேர்தல் ஆணையம் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.  பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் அடிப்படை தகவல்களை வெளியிடுவதிலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ள தேர்தல் ஆணையம் முன்வைத்த அனைத்து வாதங்களையும் உச்சநீதிமன்றம் நிரா கரித்தது. நீக்கப்பட்ட வாக்காளர்களின் பெயர்களையும், நீக்கத்திற்கான காரணங்களையும் வெளியிட்டாக வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தர விட்டது.

ஆனால், செய்தியாளர்கள் சந்திப்பில், அதுதொடர்பாக தேர்தல் ஆணையம் வாயே திறக்கவில்லை. கருநாடக மாநிலம் மகாதேவபுராவில் வாக்கு மோசடி நடந்திருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருந்த நிலையில், இதுகுறித்த தகவல்களை பொது அறிவிப்பாக ராகுல் காந்தி வெளியிட வேண்டும் என்ற சால்ஜாப்பு வாதத்தைத் தவிர, தேர்தல் ஆணையம் வேறு எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை.

தேர்தல் ஆணையத்தின் பதில் என்ன?

குறிப்பாக, வாக்கு மோசடி குற்றச்சாட்டுகள் குறித்து, ஏன் எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை என்ற முக்கியமான கேள்விக்கு தேர்தல் ஆணையம் பதிலே அளிக்கவில்லை. பீகார் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் (SIR) அவசர அவசரமாகவும், முறை யான தயாரிப்பு இல்லாமலும், தற்காலிக முறையிலும் நடத்தப்படுவது குறித்த  குற்றச்சாட்டுகள் பற்றி தேர்தல் ஆணையம் எதுவுமே கூறவில்லை.

‘இந்தியா’ கூட்டணி  கட்சிகள் தீர்மானம்

இதுதொடர்பாக, இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள எதிர்க்கட்சிகள், கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன. அதில், “தேர்தல் ஆணையம் நாட்டில் சுதந்தி ரமான மற்றும் நீதியான தேர்தல் முறையை உறுதி செய்யும் தனது அரசியலமைப்புச் சட்டக் கடமையில் முற்றிலும் தோல்வியடைந்துள்ளது. சரி சமமான போட்டி மைதானத்தை உறுதி செய்யக்கூடிய அதிகாரிகளால் தேர்தல் ஆணையம் வழிநடத்தப்படவில்லை என்பது இப்போது தெளிவாகிவிட்டது. மாறாக, தேர்தல் ஆணையத்தை வழி நடத்துபவர்கள் வாக்கு மோசடி  குறித்த அர்த்தமுள்ள விசாரணையை திசைத்திருப்பி முறியடிக்கின்றனர். மேலும் ஆளும் கட்சியை சவால் செய்பவர்களை மிரட்டும் கொள்கையைக் கடைப்பி டிக்கின்றனர். இது தங்களின் கடு மையான குற்றச்சாட்டு” என்றும் தெரி வித்துள்ளன.

இந்தக் கூட்டறிக்கையில், இந்திய தேசிய காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் பாலாசா கேப் தாக்கரே), ராஷ்ட்ரிய ஜனதா தளம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்-எல்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஆம் ஆத்மி கட்சி, சமாஜ்வாதி கட்சி, திராவிட முன்னேற்ற கழகம், தேசியவாத காங்கிரஸ் கட்சி (சரத் பவார்),  இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, தேசிய மாநாட்டுக் கட்சி, மறுமலர்ச்சி திமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கேரள காங்கிரஸ் (எம்), புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, பாரத ஆதிவாசி கட்சி, ராஷ்ட்ரிய லோக் தந்திரிக் கட்சி உள்ளிட்ட பல்வேறு மாநில மற்றும் பிராந்திய கட்சிகள் கையெழுத்திட்டுள்ளன.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *