குழந்தையை மிரட்டுவதற்காக தலையணைக்கு அடியில் வைத்த கத்தி சிறுமியின் தலையை பதம்பார்த்தது

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

யூனான், ஆக 19- சீனா -யூனான் மாநிலத்தின் குன்மிங் நகரில் உள்ள டொங்சுவான் மாவட்ட மருத்துவமனையில், 3 வயது சிறுமி தலையில் குத்திய கத்தியுடன் தனது தாயாரோடு சிகிச்சைக்கு வந்திருந்தார்.

மருத்துவர்கள் அந்தச் சிறுமிக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டு கத்தியை எடுத்தனர் தற்போது சிறுமி  நல முடன் இருப்பதாக மருத் துவமனை ஊழியர்கள் தெரிவித்தனர்.

நிகழ்ச்சி குறித்து அவரது தாயார் கூறும் போது,  அடிக்கடி சேட்டை செய்ததால் மிரட்டுவதற்காக “தலையணையின் கீழ் பழக்கத்தியை வைத் திருந்தேன். சிறுமி வேகமாக ஓடிவந்து படுத்தார் அப்போது தலையணை அடியில் இருந்த கத்தி சிறுமி தலையில் குத்திவிட்டது. உடனடியாக மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றேன்” என்றும் தெரிவித்தார்.

கூர்மையான பொருட்கள் மற்றும் தீப்பிடிக்கும் பொருட்களை எப்போது குழந்தைகளுக்கு கைக்கு எட்டாதவகையில் வைக்கவேண்டும், இருப்பினும் குழந்தைகளை கத்தி உள்ளிட்டவற்றை வைத்து மிரட்டினால் இது போன்ற விபரீதங்கள் நடைபெறும் என்பதற்கு சீனாவில் நடந்த நிகழ்வு ஒரு பாடமாக அமைந்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *