குரூப் -4 தேர்வு விடைத்தாள்கள் அட்டைப்பெட்டிகளில் கொண்டு வரப்படவில்லை டி.என்.பி.எஸ்.சி விளக்கம்

3 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, ஜூலை 24- டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4இல் உள்ள 3,935 காலிப்பணியிடங்களுக்கு தமிழ்நாடு முழுவதும் கடந்த 12ஆம் தேதி தேர்வு நடைபெற்றது. இதில், 10 லட்சம் பேர் பங்கேற்று தேர்வை எழுதினர்.

இந்த நிலையில், தேர்வுக்கான விடைக்குறிப்பு தற்போது வெளியாகியிருக்கும் நிலையில் புதிய சர்ச்சை வெடித்திருக்கிறது. சேலம் மாவட்டத்தில் இருந்து அனுப்பப்பட்ட குரூப்-4 தேர்வு விடைத்தாள்கள் உரிய முறையில் பாதுகாப்பில்லாத வகையில் கொண்டு செல்லப்பட்டதாகவும் அட்டைப்பெட்டிகள் முறையாக சீலிடப்படவில்லை என புகார் எழுந்திருக்கிறது

இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்.07/2025, வாயிலாக நேரடி நியமனத்திற்கு ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு -IV (தொகுதி – IV)-க்கான தேர்வுகள் கடந்த 12.07.2025-இல் நடைமுறைகளைப் சீலிடப்பட்ட மாநிலம் முழுவதிலும் 4,922 தேர்வு மய்யங்களில் நடைபெற்றது.

இதில் 13.89,238 விண்ணப்ப தாரர்கள் விண்ணப்பித்ததில் 11,48,019 விண்ணப்பதாரர்கள் தேர்வினை எழுதினர். தேர்வுகள் முடிந்து அனைத்து விடைத்தாள்களும் உரிய பாதுகாப்பு பின்பற்றி, இரும்புப் பெட்டிகளில் (Stainless Steel Boxes) தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய அலுவலகத்திற்கு 13.07.2025 காலை வரை பாதுகாப்பாக வரப்பெற்றுள்ளன. இதில் எவ்விதமான குளறுபடிகளும் நிகழவில்லை.

இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் கடந்த 12.07.2025 மு.ப. அன்று நடைபெற்ற ஒருங் கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு IV (தொகுதி – IV) தேர்வு தொடர்பான விடைத்தாள்கள் முறையாக சீலிடப்படாமல் அட்டைப் பெட்டிகளில் இருந்தது என பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களில் செய்திகள் வந்தன.

சேலம் மாவட்ட விடைத் தாள்களும் சீலிடப்பட்ட இரும்புப் பெட்டிகளில் (Stainless Steel Boxes) தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய அலுவலகத்திற்கு 13.07.2025 அதிகாலை பாதுகாப்பாக வரப்பெற்றுள்ளன. விடைத்தாள்கள் அட்டைப்பெட்டிகளில் கொண்டுவரப்பட்டன என்ற செய்திகளில் உண்மை இல்லை.

ஓஎம்ஆர் விடைத்தாள்கள் அனைத்தும் இரும்புப் பெட்டி களில் (Stainless Steel Boxes) வைத்து சீலிடப்பட்டு அவை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்திற்கு வந்து சேரும் வரை 24×7 முறையில் நேரலையாக கண்காணிக்கப்பட்டு அவற்றின் பாதுகாப்பு உறுதி செய்யப் பட்டுள்ளது. இவை முழுவதும் காட்சிப் பதிவு செய்யப்பட்டு சிசிடிவி கேமரா மூலமாகவும் கண்காணிக்கப் படுகிறது.

எந்த ஒரு விடைத்தாளும் செய்தி ஊடகங்களில் தெரிவிக்கப் பட்டவாறு அட்டைப் பெட்டிகளில் கொண்டு வரப்படுவது இல்லை.

பத்திரிகைச் செய்திகளில் கொடுக்கப்பட்டுள்ள ஒளிப் படங்கள், பயன்படுத்தப்பட்ட அட்டைப் பெட்டிகள் மற்றும் தேர்வுக்கு உபயோகப்படுத்தப்பட்ட பின்னர் உபரியாக இருந்த வினாத் தாள்கள் அடங்கிய அட்டைப் பெட்டிகள் போன்றவையாகும். இவை தேர்வில் பயன் பட்டது போக மீதமிருந்த வினாத் தாள்கள் என்பதால், வழக்கமான நடைமுறையின்படி அந்தந்த மாவட்டங்களிலேயே வைக்கப் பட்டிருக்கும்.

தேர்வு நடைமுறைகள் முடிந்த பின்னர் இவை மாவட்ட கருவூலகங்கள் மூலமாக மாவட்ட மய்ய நூலகங்கள் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். இது குறித்து தேர்வாணையம் ஏற்கெனவே விரிவான நடை முறையினை வெளியிட்டு பின்பற்றி வருகிறது.

எனவே. 12.07.2025 (மு.ப.) அன்று நடந்து முடிந்த ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு IV (தொகுதி – IV) தேர்வு தொடர்பான விடைத்தாள்கள் முறையாக சீலிடப்படாமல் அட்டைப் பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்தன என்று வரும் பத்திரிகை மற்றும் இதர ஊடக செய்திகள் அனைத்தும் ஆதாரமற்றவையாகும்.

வினாத்தாளுக்கான உத்தேச விடைகள் தேர்வாணைய இணைய தளத்தில் 21.07.2025 மாலை 05.00 மணியளவில் வெளியிடப்பட்டு ஆட்சேபனைகள் ஏதுமிருப்பின் தெரிவிப்பதற்காக ஒரு வார கால அவகாசமும் அளிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து அனைத்து தொடர் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு முன்னரே தேர்வாணையத்தால் தெரிவித்தபடி இந்த தேர்வுகளுக்கான முடிவுகள் மூன்று மாத காலத்திற்குள் வெளியிடப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *