உரத்தநாடு தெற்கு ஒன்றிய கழக சார்பில்
5.9.2025 அன்று தொண்டராம்பட்டில் தமிழர் தலைவரிடம்
உரத்தநாடு, ஜூலை 20- உரத்தநாடு தெற்கு ஒன்றிய திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 19 .7 .2025 அன்று மாலை 5 மணிக்கு வீர ரத்தின மகாலில் உற்சாகம் பொங்க நடைபெற்றது.
மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் சி..அமர்சிங் தலைமை வகித்தார். ஒன்றிய கழக துணைத்தலைவர் நெடுவை.கு.நேரு வரவேற்று உரையாற்றினார். கூட்டத்தின் நோக்கத்தினை விளக்கி மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் உரையாற்றினார். தொடர்ந்து பொறியாளர் ப.பாலகிருட்டிணன் ஊக்கவுரை வழங்கினார்.
ஒன்றிய கழகத்தலைவர் த.செகநாதன், ஒன்றிய கழக செயலாளர் மாநல்.பரமசிவம் ஆகியோர் பெரியார் உலகமெனும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் இலட்சிய திட்டத்தை நிறைவேற்ற அனைவரும் உற்சாகமாக செயலாற்ற வேண்டுமென கேட்டுக்கொண்டார்கள்.
மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், மாநில ப.க.அமைப்பாளர் கோபு.பழனிவேல், திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா செந்தூரப் பாண்டியன் மாவட்டச் செயலாளர் அ.அருணகிரி, பொதுக்குழு உறுப்பினர் தீ.வ. ஞானசிகாமணி, பெரியார் பெருந்தொண்டர்கள் வடசேரி முத்து. இராசேந்திரன் தொண்டராம்பட்டு செ. உத்தராபதி, நெடுவை கு. ஜெயமணி, ஒன்றிய துணைச் செயலாளர் புரபசர்க.சுடர்வேந்தன், ஒன்றிய விவசாய அணி தலைவர் மா. மதியழகன், ஒன்றிய துணைச் செயலாளர் நெடுவை.கு.லெனின், ஒன்றிய இளைஞரணி தலைவர் ரெ. இரஞ்சித் குமார் ஒன்றிய இளைஞரணி செயலாளர் வன்னிப்பட்டு மு.செந்தில்குமார், செந்தமிழ் சிலம்பு விளையாட்டு குழு நிறுவனர் பொறியாளர் சங்கர், பெரியார் நகர் அ. உத்திராபதி ஒக்கநாடு மேலையூர் செயலாளர் நா. வீரத்தமிழன் வடசேரி சந்திரசேகரன் தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம்ஆகியோர் நிதியளிப்பு விழா வெற்றிகரமாக நடைபெற ஒத்துழைப்பை வழங்குவோம் என உறுதிமொழிந்தார்கள்.
அமிர்தா புத்தக நிலைய உரிமையாளர் மா.திராவிடச்செல்வம்-ரூ.2லட்சம், ஒன்றிய இளைஞரணி துணைச்செயலாளர் கோவிலூர் சதீசு- ரூ.2,லட்சம், மண்டலக்கோட்டை புலவர்.இரா.மோகன்தாசுரூ-2,லட்சம் என பொறுப்பேற்றுக்கொண்டார்கள்.
தீர்மானங்களை முன்மொழிந்து பெரியார் வீர விளையாட்டுக்கழக மாநில செயலாளர் கபடி நா.இராமகிருட்டிணன் உரையாற்றினார்.
வரவேற்பு மற்றும் நிதி வசூல் குழுவினரை மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் அறிவித்தார்.
கூட்டத்தில் ஒன்றிய தொழிலாளரணி தலைவர் துரை.தன்மானம், வடக்கு ஒன்றிய கழக துணைச்செயலாளர் கக்கரைகோ.இராமமூர்த்தி, வடசேரி என்.பி.சரவணன், ஒக்கநாடுமேலையூர் இரா.மகேசுவரன், சட்டக்கல்லூரி மாணவர் செ.அன்புவீரமணி, ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தார்கள். நிறைவாக பேரா.கு.குட்டிமணி நன்றி கூறினார்.
அனைவருக்கும் தமிழர் தலைவர் அவர்களின் கையெழுத்துடன் கூடிய அச்சிடப்பட்ட அறிக்கை வழங்கப்பட்டது.
நிறைவேற்றப்பட்ட
தீர்மானங்கள்
உரத்தநாடு ஒன்றிய திராவிடர் கழகம் தெற்கு சார்பில்,”தொண்டராம்பட்டில்” பெரியார் உலகத்திற்கு நிதியளிப்பு விழாவிற்கு வருகை தந்திட ஒப்புதல் அளித்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு இக்கூட்டம் உளங்கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
உலகம் பெரியார் மயம் -பெரியார் உலக மயம் ஆக்கிடும் பெரும் பணியில் திருச்சி சிறுகனூரில் 100 கோடி ரூபாய் செலவில் அமைய உள்ள பெரியார் உலகத்திற்கு உரத்தநாடு தெற்கு ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் 10 லட்சத்திற்கு மேல் பெருமளவில் நிதி திரட்டி அளிப்பதென பெரு மகிழ்வோடு இக்கூட்டம் முடிவு செய்கிறது
92 அகவையில் ஓய்வின்றி உழைத்து வரும் ஒப்பற்ற தலைவராம் நமது தமிழர் தலைவர், ஆசிரியர் அவர்களின் வேண்டுகோளை ஏற்று பெரியார் உலகத்திற்கு நன்கொடைகளை வாரி வழங்குமாறு தமிழின பெருமக்களை இக்கூட்டம் வேண்டி கேட்டுக்கொள்கிறது.
உரத்தநாடு தெற்கு ஒன்றியம் கழக சார்பில் தொண்டராம்பட்டில் பெரியார் உலகத்திற்கு நிதியளிப்பு விழா வரவேற்பு மற்றும் நிதி திரட்டல் குழு
ஒருங்கிணைப்பாளர்கள்
இரா ஜெயக்குமார் மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்,
உரத்தநாடு இரா. குணசேகரன் மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்
வழக்குரைஞர் சி .அமர்சிங் தஞ்சை மாவட்டத் தலைவர்
.அ.அருணகிரி மாவட்டச் செயலாளர்
த. செகநாதன் தெற்கு ஒன்றியத் தலைவர்
மருத்துவர் மா. செல்வராசு கீர்த்தனா மருத்துவமனை தஞ்சாவூர்
.மு அய்யாவு மேனாள் பதிவாளர், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் வல்லம்
பேராசிரியர் உ.பர்வீன் பெரியார் அறக்கட்டளை உறுப்பினர்
.முத்து .இராசேந்திரன் பெரியார் பெருந்தொண்டர்
முனைவர். து. இரமேஷ் உடற்கல்வி இயக்குனர், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்,
தொண்டராம்பட்டு செ.உத்திராபதி, முக்கரை சி. செல்வராசு,
வள்ளியம்மை தண்டபாணி மாவட்ட கழக மகளிர் அணி செயலாளர்
தலைவர்: மாநல் .பரமசிவம் தெற்கு ஒன்றிய செயலாளர்
செயலாளர்: நா .இராமகிருட்டிணன் மாநில செயலாளர், பெரியார் வீர விளையாட்டு கழகம்
பொருளாளர்: கு.அய்யாத்துரை
துணைத் தலைவர்கள்: தீ.வ. ஞானசிகாமணி பொதுக்குழு உறுப்பினர், மா. மதியழகன், ஒன்றிய விவசாய அணித் தலைவர், க.அறிவரசு ஒன்றிய விவசாய அணி செயலாளர் பொறியாளர் ப.பாலகிருட்டிணன் பொறுப்பாளர், பெரியார் வீர விளையாட்டு கழகம்
துணைச்செயலாளர்கள்: வீ.காத்தலிங்கம் சுயமரியாதை வீரர் கண்ணுக்குடி மேற்கு, புரபசர். க.சுடர்வேந்தன் ஒன்றிய துணைச் செயலாளர், நெடுவை.கு.லெனின் ஒன்றிய துணைச் செயலாளர், ரெ.இரஞ்சித் குமார் ஒன்றிய இளைஞரணி தலைவர்
உறுப்பினர்கள்:
கொள்கை வீராங்கனை. நெடுவை.குஜெயமணி, ஆசிரியர்.கோபு. பழனிவேல் மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம், நெடுவை.கு. நேரு ஒன்றிய துணைத் தலைவர், நெடுவை. தோ. தம்பிக்கண்ணு, ஆ.இலக்குமணன் மாவட்ட இணைச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம், ரெ.சுப்ரமணியன் மாவட்ட துணைச் செயலாளர், வழக்குரைஞர் மு. வீரமணி, பாளம்புத்தூர்குடிக்காடு அசோக் தமிழர் தலைவரின் ஊர்தி ஓட்டுநர், செ. தமிழ்ச்செல்வன் மாநகர கழகத் தலைவர், தஞ்சை, இரா.இளவரசன் மாநகர துணைச் செயலாளர், தஞ்சை க.மாரிமுத்து மாவட்ட செயலாளர், திராவிடர் கழக சட்டத்துறை, குழந்தை. கவுதமன் மாவட்ட அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம், மா.திராவிடச் செல்வன் அமிர்தா புத்தக நிலையம் தஞ்சாவூர், அழகு ஆ. இராமகிருட்டிணன் ஒன்றிய தொழிலாளர் அணி தலைவர், பொறியாளர் இரா.சங்கர் நிறுவனர், செந்தமிழ் வீரசிலம்பம் விளையாட்டு குழு, சென்னை, வடசேரி இ. அல்லிராணி ஒன்றிய மகளிர் அணி தலைவர், மா.அஞ்சம்மாள் ஒன்றிய மகளிரணி செயலாளர், மு.செந்தில் குமார் ஒன்றிய இளைஞரணி செயலாளர், கோவிலூர் ரெ. சதீஷ்குமார் ஒன்றிய இளைஞர் அணி துணைத் தலைவர், நெடுவை.ஆசிரியர் ந.காமராசு, நெடுவை.பொறியாளர் ந .நேரு, நெடுவை. ந.சங்கர், நெடுவை.வை.கு.ஆனந்தன் அமைப்பாளர், கே.கே.சன்ஸ் உரத்தநாடு, நெடுவை வெ.விமல், அ.உத்திராபதி, துரை. தன்மானம் ஒன்றிய தொழிலாளர் அணி தலைவர், அ. இராசப்பன், நா.வீரத் தமிழன், ந.ரமேஷ், க.மாணிக்கவாசகம், மா. தென்னகம், வெ. கோபால், சி.இளையராஜா, மழவராயர் தெரு ம. மணி, இரா.மகேஸ்வரன், சு.கலியபெருமாள், சமயன் குடிக்காடு மா.கவுதமன், க.பரணிதரன், ஆர்.கே.நிரஞ்சன், சு.இராமதாசு, வை.பாலர்சிங்கம், அ.வீரமணி, ம.திருப்பதி, ம.ரகு, சூ.முத்தமிழ், தி.வள்ளுவன், நெடுவை.வை.கு.இரவி, ராமசந்திரன், சென்னை மருத்துவர் சிவா, காவரப்பட்டு கே.வி.தர்மராஜன், வீர இளங்கோவன், புதுவளவு அ.மெய்யழகன்
வெளிநாடு வாழ் ஒக்கநாடு மேலையூர் பெருந்தகையாளர்கள்
கோ.ஜெயராமன், துரை.பைரவன், ச.கலைச்செல்வன், ச.அருனேசு, துரை.சுரேசு, ஆ.இராசகாந்தி, ம.அய்யப்பன், சு.மணிராசு, செ.விஜய், ச.பெரியார் மணி, இர.சரவணன், கோவி.வீரையன், ந.இரமேசு, வீர.ஜோதி நாதன், ம. பாண்டியராஜன், பி. கலைவாணன், தங்க. வினோதரன், பா. கவி பாரதி, பி.இனியவன், பி.சின்னையன், பி.லட்சுமணன், வெ.சக்திவேல், நெடுவை கு.இளந்திராவிடன்
பொறியாளர்.ப.முகில், செ.அன்புவீரமணி சட்டக்கல்லூரி மாணவர் திராவிட மாணவர் கழகம், செ.பொழிலன் திராவிட மாணவர் கழகம், மா.புகழினி திராவிட மாணவர் கழகம் ஒக்கநாடு மேலையூர், வி.புதியவன் நெடுவை. திராவிட மாணவர் கழகம், செ. கிருஷ்ணராஜ், திராவிட மாணவர் கழகம், மன்னர் சரபோஜி கல்லூரி, செ.ஜெய்சங்கர், திராவிட மாணவர் கழகம் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி, ந.ராஜ்குமார், திராவிட மாணவர் கழகம்