குணப்படுத்த முடியாத நோய்களால் பாதிக்கப்பட்ட சிறைக் கைதிகளை விடுவிக்க புதிய விதிமுறைகளை வெளியிட வேண்டும் மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

1 Min Read

புதுடில்லி, ஜூலை 19 குணப்படுத்த முடியாத நோய்களால் பாதிக்கப்பட்ட சிறைக் கைதிகளின் விடுதலை குறித்து அனைத்து மாநிலங்களும் பொதுவான சிறை விதிமுறைகளை வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் நேற்று (18.7.2025) தெரிவித்தது.

நோய்களால் பாதிக்கப்பட்ட கைதிகள்

உச்சநீதிமன்றத்தில் தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு தாக்கல் செய்த மனுவில், ‘நாட்டில் 70 வயதுக்கு மேற்பட்ட கைதிகள், குணப்படுத்த முடியாத நோய்களால் பாதிக்கப்பட்ட கைதிகளை, கருணை அடிப்படையில் விடுதலை செய்வதற்கு வழிவகை செய்ய உத்தரவிட வேண்டும்’ என்று கோரப்பட்டது.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாக், சந்தீப் மேத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக  விசாரணைக்கு வந்தது. அப்போது ஒன்றிய அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் அய்ஸ்வா்யா பாட்டீ ஆஜராகி, ‘குணப்படுத்த முடியாத நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள சிறைக் கைதிகள் குறித்து ஒன்றிய அரசு அக்கறை கொண்டுள்ளது. இதுதொடா்பாக வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளில், அத்தகைய கைதிகளை சிறந்த முறையில் கவனித்துக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொது மன்னிப்பின் ஒரு பகுதியாக, அத்தகைய கைதிகளை விடுதலை செய்து குறித்து மாநில, யூனியன் பிரதேச அரசுகள் பரிசீலிக்கலாம்’ என்று தெரிவித்தாா்.

உத்தரவு

இதைத்தொடா்ந்து நீதிபதிகள் அமா்வு கூறுகையில், ‘அனைத்து மாநிலங்களும் பொதுவான சிறை விதிமுறைகளை வெளியிட வேண்டும். அதில் குணப்படுத்த முடியாத நோய்களால் பாதிக்கப்பட்ட சிறைக் கைதிகளின் விடுதலை குறித்து இடம்பெற வேண்டும்’ என்று தெரிவித்து, மனு மீதான தீா்ப்பை ஒத்திவைத்தது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *