திருச்சி, ஜூன் 16- புகையிலை எதிர்ப்பு நாளினை முன்னிட்டு ஹர்ஷமித்ரா உயர் சிறப்பு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மய்யம் நடத்திய “Reel போடுங்க Real Hero ஆகுங்க” என்ற போட்டியினை நடத்தியது. இதில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதுநிலை மற்றும் இளநிலை மருந்தி யல் மாணவர்கள் 6 குழுக் களாக தங்களுடைய படைப்புக்களை சமர்ப்பித் தனர்.
நான்காமாண்டு இளநிலை மருந்தியல் மாணவர்கள் வி. வினோத், என்.மனோஜ், டி. மெய்யரசு, பி. மணி மொழிச்செல்வன், டி. யோகேஷ், டி. ரமணா மற்றும் மூன்றாமாண்டு இளநிலை மருந்தியல் மாணவர் ஏ. முகமது சித்திக் ஆகியோரின் இரண்டு படைப்புக்கள் முதல் 50 சிறந்த Reelஇல் இடம் பெற்றது.
இதற்கான பரிசு வழங்கும் நிகழ்ச்சி ஹர்ஷமித்ரா உயர் சிறப்பு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மய்யத் தில் 31.05.2025 அன்று மாலை 5 மணியளவில் நடைபெற்றது. சிறப்பிடம் பெற்ற பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவர்களுக்கு விஜய் சேதுபதி நடித்த ‘தர்மதுரை’ திரைப்பட இயக்குநர் சீனு இராமசாமி பரிசு மற்றும் பாராட்டுச்சான்றிதழ்கள் வழங்கி சிறப்பித்தார்.
இப்புகையிலை எதிர்ப்பு நாள் கருத்தரங்க நிகழ்வில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை கலந்து கொண்டு வாழ்த் துரை வழங்கினார். ஹர்ஷமித்ரா புற்றுநோய் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர்கள் மருத்துவர் கோவிந்தராஜ், மருத்துவர் சசிபிரியா கோவிந்தராஜ் ஆகியோர் தலைமை வகித்த இந் நிகழ்வில் மருத்துவம் மற்றும் செவிலியர் கல்லூரி முதல்வர்கள் முன்னிலை வகித்து சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் பேராசிரியர்கள் பேரா. எஸ். பிரியதர்ஷினி மற் றும் பேரா. ரா. தினேஷ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் பெற்ற மாணவர்களுக்கு கல்லூரியின் நிர்வாகத் தினர், முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என அனைத்துத் தரப்பினரும் கலந்து கொண்ட இப்போட்டியில் புகையிலைப் பொருட்கள் பயன்படுத்துவதனால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையான Reelயினை பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவர்கள் சமர்ப்பித்து சிறந்த 50 Reelஇல் இரண்டு இடங்களை பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.