சென்னை, மே 15- சென்னை தரமணியில் உள்ள தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் 2025-2026 கல்வியாண்டில் இளங்கலை காட்சிக்கலை (Bachelor of Visual Arts) எனும் நான்காண்டு கால பட்டப்படிப்பிற்கான கீழ்க்கண்ட பிரிவுகளில் மாணவர் சேர்கைக்கு இணைய தளம் வழியாக விண்ணப்பங்கள் 28.04.2025 முதல் பெறப்பட்டு வருகிறது.
- இளங்கலை காட்சிக்கலை (ஒளிப்பதிவு) – Bachelor of Visual Arts (Cinematography)
- இளங்கலை காட்சிக்கலை (எண்மிய இடைநிலை) – Bachelor of Visual Arts (Digital Intermediate)
- இளங்கலை- காட்சிக்கலை (ஒலிப்பதிவு) – Bachelor of Visual Arts (Audiography)
- இளங்கலை காட்சிக்கலை (இயக்குதல் மற்றும் திரைக்கதை எழுதுதல்) – Bachelor of Visual Arts (Direction and Screenplay writing)
- இளங்கலை காட்சிக்கலை (படத்தொகுப்பு) – Bachelor of Visual Arts (Film Editing)
- இளங்கலை காட்சிக்கலை (உயிர்ப்பூட்டல் மற்றும் காட்சிப்பயன்) – Bachelor of Visual Arts (Animation and Visual Effects)
இளங்கலைக் காட்சிக்கலை பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க 28.05.2025 கடைசி நாள் என்பதால், கலை ஆர்வம் உள்ள மாணவ/மாணவியர் www.filminstitute.tn.gov.in விருப்பமுள்ள பாடப்பிரிவுகளுக்கு எனும் இணையத்தளத்தில், மாணவர் சேர்க்கைக்கான படிவத்தினை பயனாளர் கையேட்டின் (User Manual) அறிவுத்தலின்படி பூர்த்தி செய்து, விண்ணப்ப கட்டணம் செலுத்தி பதிவு செய்தும், அனைத்து உரிய ஆவணங்களுடன் 28.05.2025 மாலை 5.00 மணிக்குள் பதிவேற்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.