(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்.,
சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்)
கேள்வி: ‘பெண் அர்ச்சகர்கள், ஓதுவார்கள் நியமனம், பெரியாரின் நெஞ்சில் திராவிட மாடல் அரசு வைக்கும் பூ’ என்கிறாரே முதலமைச்சர் ஸ்டாலின்.
பதில்: “கடவுளை வணங்குகிறவன் காட்டு மிராண்டி” என்று கூறினார் ஈ.வெ.ரா., அந்தக் கட வுளை வணங்கும் காட்டுமிராண்டி பெண் அர்ச்ச கர்கள், ஓதுவார்களை ஈ.வெ.ரா. மனதில் திராவிட மாடல் அரசு வைத்த “பூ” என்கிறாரே ஸ்டாலின்! இதைக் கேட்டால் என்ன சொல்வார் ஈ.வெ.ரா?
பதிலடி: அசாம் கோயில் – காமக்கியா தேவிக்கு மாதா மாதம் மாதவிடாய் வருகிறதே – என்ன செய்ய உத்தேசம்?
– – – – –
கேள்வி: ஞானம், அறிவு இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்ன?
பதில்: அய்ம்புலன்களின் மூலம் பெறுவது அறிவு, அய்ம்புலன்களையும் அடக்கிப் பெறுவது ஞானம்.
பதிலடி: தாருகாவனத்து ரிஷி பத்தினிகளைக் கற்பழித்த கடவுள் அய்ம்புலன்களையும் அடக்கிய வரா?
– – – – –
கேள்வி: விநாயகரும், விஷ்ணுவும் தெய்வங்கள் என்றால், தமிழகத்திற்கு வந்த வேற்று மதத் தெய்வங் களும் வந்தேறி தெய்வங்கள்தானே?
பதில்: தமிழகத்துக்கு வந்த மற்ற மத தெய்வங்கள் ஓட்டு வங்கி உள்ள தெய்வங்கள். ஓட்டு பலம் உள்ள தெய்வங்கள் வந்தேறிகள் அல்ல.
பதிலடி: கடவுளில் கூட வந்தேறிக் கடவுள், மண்ணின் மைந்தர் கடவுள் உண்டோ! வந்தேறிகள் கண்ணோட்டத்தின்படி ஒரு மதத்தின் கடவுளை இன்னொரு மதக்காரன் ஏற்க மறுக்கிறான் என்றால் அவன் நாத்திகன்தானே!
முதலில் கடவுள் நம்பிக்கையாளர்கள் ஒரு முடிவுக்கு வரட்டும்!
– – – – –
கேள்வி: ஹிந்து மத வெறுப்பு, ஹிந்துக் கடவுளர்கள் அவமதிப்பு, சனாதன துறவறம் என கொடி கட்டி பறக்கும் ஆளும் கட்சியினர், கோவில்களில் அறங் காவலர்களாவது எதற்கு?
பதில்: கோவில்களில் கழகத்தினர் வெறுக்கும் ஹிந்து கடவுள் சிலைகள் மட்டுமா இருக்கின்றன? நிலபுலன், நகை, உண்டியல் பணம், பரிவட்டம் எல்லாம் இருக்கின்றனவே, பிறகு ஏன் கடவுளை மறுக்கும் ஆளும் கட்சியினர், அறங்காவலர்களாகத் துடிக்க மாட்டார்கள்?
பதிலடி:கோயில் பெருச்சாளிகளிடமிருந்து கோயிலையும் சொத்துகளையும் பாதுகாக்கத்தான் இந்து அறநிலையத் துறை. ஒரு சாராய பாட்டிலுக்கே சாமி சிலையை விற்ற அர்ச்சகர் பற்றி எல்லாம் சர்.சி.பி.ராம சாமி அய்யர் கமிஷன் கூறியுள்ளதே!
– – – – –
கேள்வி: பெண்கள் மது குடிக்கும் கொடுமை குறித்து?
பதில்: திராவிட மாடல் பெண்களான அவர்களின் உரிமை அல்லவா அது? கொடுமை என்கிறீர்களே?
பதிலடி: குடிப்பதில்கூட ஆண் குடிகாரன், பெண் குடிகாரர் உண்டா?
சுராபானம் குடித்தவன் சுரன் (பார்ப்பான்) குடிக்க மறுத்தவன் அசுரன் (திராவிடன்)
புரிகிறதா? (ஹென்றி ஸ்மித் வில்லியம் எழுதிய சரித்திரக்காரர்களின் உலக சரித்திர வால்யூம்-2, பக். 521).
– – – – –
கேள்வி: தாங்கள் உயந்த ஜாதி என்று நினைப்ப வர்கள் மீது வெறுப்பு வரும் நபர்களுக்கு, தாங்கள் உயர்ந்த மதம் என்று நினைப்பவர்கள் மீது வெறுப்பு வருவதில்லையே?
பதில்: தாங்கள் உயர்ந்த ஜாதி என்று கூறுபவர்களை விட, தங்கள் மதம் உயர்ந்த மதம் என்று கூறுபவர் களுக்கு ஓட்டு அதிகம், அதனால்தான்.
பதிலடி: ஆக மதம் என்றாலும் ஜாதி என்றாலும் ஒருவர் மற்றவர் மீது வெறுப்பை உமிழ்வதே!
– – – – –
கேள்வி: துக்ளக் ஆசிரியரான உங்களது மனத் துணிவு யாரிடமிருந்து பெறப்பட்டது? ஸ்வாமி விவேகானந்தரிடமிருந்தா, நேதாஜி? வல்லபாய் படேலிட மிருந்தா?
பதில்: 1987இல் என்னை காஞ்சி பெரியவர் “அர சாங்கம் உன்னைத் துன்புறுத்தினால் பயப்படுவியா” என்று கேட்டார். அன்றிலிருந்து எனக்கு அச்சம் என்பதே போய்விட்டது (துக்ளக், 9.8.2022 – அவர் தந்த அனுபவங்கள் – 69).
பதிலடி: காஞ்சிப் பெரியவர் என்றால் ஜெயிலுக்கும் பெயிலுக்குமாக அலைந்தவரா? அல்லது தீண்டமை க்ஷேமகரமானது என்று சொன்ன சந்திர சேகரேந்திரரா?
நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்டவர்கள் எல்லாம் “வீரத்தை” பற்றிப் பேசுவதா?
– – – – –
கேள்வி: ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் காமமும், இறை பக்தியும் எந்தளவுக்கு இருக்க வேண்டும்? அதற்கு எல்லை உண்டா?
பதில்: காமம் என்பது படைப்பின் ரகசியம். அதற்கு வரையறை தர்மம். பகவத் கீதையில் “தர்மத்தின் அடிப்படையிலான காமத்தில் தான் இருக்கிறேன்” என்கிறார் கிருஷ்ணர். தர்ம அடிப்படை காமம்தான் குடும்ப வாழ்க்கை, குடும்ப வாழ்க்கைக்கு அப்பாற்பட்ட காமம் அதர்மம்.
பதிலடி: ஜலக் கிரீடை கடவுள்கள் எந்த வகைக் காமத்திற்குச் சொந்தக்காரர்கள்?
– – – – –
கேள்வி: “தமிழ்நாடு அரசுதான் பெரியார்; பெரியார்தான் தமிழ்நாடு அரசு” என்கிறாரே முதல்வர் ஸ்டாலின்?
பதில்: இப்போது மட்டும் ஈ.வெ.ரா. இருந்திருந்தால் நடப்பதே வேறு. “தமிழ் காட்டுமிராண்டி மொழி, தமிழர்கள் காட்டுமிராண்டிகள் என்று கூறிவந்த கன்னடனான என்னை, காட்டுமிராண்டி தமிழக அரசுடன் ஒப்பிட்டு, காட்டுமிராண்டி என்று கூறுபவன் யார்?” என்று ஸ்டாலினை உண்டு இல்லை என்று செய்திருப்பார்.
பதிலடி: தமிழை நீஷ மொழி என்று சொன்ன பேர் வழிதானே துக்ளக் கும்பலின் மகா ‘பெரியவாள்!’
– – – – –
கேள்வி: நாத்திகன் உருவாகின்றானா, உரு வாக்கப் படுகின்றானா?
பதில்: ஆஸ்திகனின் மனதில் அடிக்கடி நாஸ்தி கன் உருவாகி, அல்லது உருவாக்கப்பட்டு மறை கிறான். நாஸ்திகன் மனதில் அடிக்கடி ஆஸ்திகன் உருவாகி அல்லது உருவாக்கப்பட்டு மறைகிறான். இது மாயை யின் விளையாட்டு. ‘கடவுள் பொய் என்று வாழ்நாள் முழுதும் மாறாமல் இருப்பவன் கோடியில் ஒருவன், கடவுள் ஒன்றுதான் உண்மை என்று வாழ்நாள் முழுதும் உறுதியாக இருப்பவனும் கோடியில் ஒருவன்’ என்கிறார் காஞ்சிப் பெரியவர். இடையில் கடவுள் உண்மையா – பொய்யா என்று ஊசலாடுபவர்கள்தான் மற்றவர்கள்.
பதிலடி: ஹிந்து மதத்தில் நாத்திகனுக்கு இடம் உண்டா இல்லையா? ஹிந்து மதத்தில் கடவுளை மறுப் பவன் நாத்திகன் அல்ல; மாறாக வேதத்தை எதிர்ப்ப வன்தான் நாத்திகன் என்பது குருமூர்த்தி களுக்குத் தெரியுமா?
காஞ்சி சங்கராச்சாரியாரை மகான் என்று கூறும் குருமூர்த்திகள் அவர் கூறியுள்ளதைப் படிக்கவில் லையே – பரிதாபம்!
– – – – –
கேள்வி: தமிழக இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர் களும் தமிழர்களா இல்லையா?
பதில்: யார் தமிழர், யார் தமிழர் இல்லை என்று சொல்லும் உரிமை தி.க., தி.மு.க.வுக்குத்தானே இருக் கிறது. அவர்களின் பார்வையில் பிராமணர்களைத் தவிர, இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் உள்பட எல்லோரும் தமிழர்களே. அதனால்தான் சங்கத் தமிழ் நூல்களை ஊர் ஊராகத் தேடித்தேடி கண்டு பிடித்து, தமிழுலகுக்கு அளித்த உ.வே.ஸ்வாமிநாத அய்யரைக் கூட அவர்கள் உ.வே. ஸ்வாமிநாதனாக ஆக்கி விட்டார்கள்.
பதிலடி: 1941இல் வானொலியில் உ.வே.சாமி நாதய்யர் பேசியது:
ஓர் ஏழை வேலைக்காரனைப் பார்த்து சோறு தின்றாயா என்று கேட்கலாம். ஆனால் ஒரு கனவா னைப் பார்த்து, போஜனம் ஆயிற்றா என்று கேட்க வேண்டும். துறவிகளைப் பார்த்து பிக்ஷை ஆயிற்றா என்று கேட்க வேண்டும் என்று பேசிய அந்த உ..வே.சாவா?
தமக்கு வணக்கம் தெரிவித்த பா.வே.மாணிக்க நாயக்கர் அவர்களைப் பார்த்து உ.வே.சாமிநாதய்யர் “என்ன நாயக்கர்வாள் நீங்களும் இந்த சுயமரியாதைக் கரர்கள் மாதிரி வணக்கம் என்கிறீர்களே? நமஸ்காரம் என்று சொல்லக்கூடாதா” என மனம் வருந்தினாரே, அதன் பொருள் என்ன?
– – – – –
கேள்வி:‘மகாத்மா காந்தியின் லட்சியப் பாதையில் வெறுப்புணர்வை ஒழித்து, எல்லோருக்கும் எல்லாம் என்ற இந்தியாவைக் கட்டமைப்போம்’ என்று முதல்வர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளாரே?
பதில்: பாவம் ஸ்டாலின். ‘நான் ஒரு சனாதனி – ஹிந்து, வேதம், புராணம், அவதாரம், மறுபிறப்பு, வர்ணதர்மம், உருவ வழிபாடு அனைத்திலும் நம்பிக்கை உள்ளவன்’ என்று காந்தி கூறினார் என்பது அவருக்குத் தெரியாது. அதனால்தான் காந்தி வெறுப் புணர்வு இல்லாமல் இருந்தார் என்பதும் அவருக்குத் தெரியாது. எதுவுமே தெரியாதவர் அவர், பாவம்.
பதிலடி: ஒரு தலைவரை மதிப்பது என்றால் அந்தத் தலைவர் கூறும் அனைத்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பொருளா?
ஹிந்து மதத்தைச் சேர்ந்தவன் என்று சொல்லிக் கொண்டு ஸ்மார்த்தர் – வைணவர்கள் குஸ்தி போடுவது ஏன்? வைணவத்திலும் வடகலை தென்கலை சண்டை சிரிப்பாய் சிரிக்கிறதே!
காஞ்சிபுரம் யானைக்கு வடகலை நாமம் போடுவதா? தென்கலை நாமம் போடுவதா? என்ற வழக்கு லண்டன் ஃப்ரிவு கவுன்சில் வரை சென்றதே!
– – – – –
கேள்வி: இதுவரை தி.மு.க. அரசின் சாதனை?
பதில்: திராவிட மாடல், திராவிட மாடல், திராவிட மாடல்.
பதிலடி: திராவிடம் என்று சொன்னாலே பார்ப் பனர்களுக்கு உச்சி முதல் உள்ளங்கால் வரை எரி வதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
– 25.10.2023 ‘துக்ளக்’ கேள்வி பதிலுக்குப் பதிலடிகள் இவை