இதுதான் தீபாவளி பரிசு

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னையில் 210 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள்

19000 மாநகராட்சி ஊழியர்கள் படும் அவதி

சென்னை, நவ.14-  தீபாவளியை யொட்டி சென்னையில் 180 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக மாநக ராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ் ணன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் தீபாவளி கடந்த 12.11.2023 அன்று கொண் டாடப்பட்டது. வீடுகளுக்கு முன் தெருக்களில் பட்டாசுகளை வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சென்னையைப் பொறுத்தவரை 15 மண்டலங்களில் 35 ஆயிரம் தெருக்கள் உள்ளன. 

இவற்றில் வெடிக்கப்பட்ட பட் டாசுக் கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்தும் பணியில் மாநக ராட்சியின் தூய்மைப் பணி யாளர்கள் நேற்று (13.11.2023) காலை முதல் ஈடுபட்டு வருகின் றனர். அதன்படி மண்டலத்துக்கு 2 வாகனங்கள் என 30 வாகனங்கள் தூய்மைப் பணிக்காக ஒதுக்கப்பட் டுள்ளன.

மயிலாப்பூர் மயானத்தில் ஆய்வு

இந்நிலையில், சென்னையை அடுத்த அக்கரை பகுதியில் பட்டாசு குப்பையை அகற்றும் பணியைமாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார். தொடர்ந்து மயிலாப்பூர் மயான பூமியில் சேகரித்து வைக்கப் பட்டுள்ள பட்டாசுக் கழிவுகளை மாநகராட்சி பணியாளர்கள் மூலம் அகற்றும் பணியையும் ஆய்வு செய்தார்.

அப்போது செய்தியாளர்க ளிடம் அவர் கூறியதாவது: 

தீபாவளியையொட்டி சென்னை மாநகரில் வெடிக்கப் படும் பட்டாசு கழிவுகளை அகற்ற மாநகராட்சி சார்பில் ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் நவ.11 முதல் 13ஆம் தேதி வரை பட்டாசுக் கழிவுகளை விரைந்து சேகரிக்க தனி குழுக்கள் அமைக்கப்பட்டு 19,063 தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். 

இதுவரை சென்னையில் 11-ஆம் தேதி 3.67 மெட்ரிக் டன், 12ஆ-ம் தேதி 53.79 மெட்ரிக் டன், 13ஆ-ம் தேதி 152.28 மெட்ரிக் டன் என கடந்த 3 நாட்களில் மொத்தமாக 210 மெட்ரிக்டன் பட்டாசு கழிவு கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு 275 மெ.டன்

 கடந்த ஆண்டு 5 நாட்களில் 275மெட்ரிக் டன் கழிவுகள் சேகரிக்கப்பட்டது குறிப்பிடத் தக்கது. தீபாவளியில் சேகரிக்கப் படும் கழிவுகள் மிகவும் அபாயகர மானவை.

எனவே இந்த பட்டாசுகள் கழிவுகள் தனித்தனியாக பாதுகாப் பான முறையில் சேகரிக்கப்பட் டுள்ளன. இதில் முதல்கட்டமாக 54 மெட்ரிக் டன் கழிவுகள் கும்மிடிப்பூண்டியில் உள்ள கழிவு களை முறைப்படுத்தும் செயலாக்கு நிலையத்துக்கு கொண்டு செல்லப் பட்டுள்ளது.

ராயபுரம், தண்டையார் பேட்டை, அண்ணாநகர், அடை யாறு போன்ற விரிவாக்க பகுதி களில் அதிகளவு பட்டாசு கழி வுகள் சேகரிக்கப்பட்டன. 

அடுக்குமாடி குடியிருப்புகளில் தீ விபத்து ஏற்படாத வண்ணம் ஒத்துழைப்பு தந்த பொதுமக்களுக்கு நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *