மதுரை, ஏப்.21 ஒன்றிய அரசின் அங்கீகாரம் பெற்ற ஆளுநரை ஒன்றிய-மாநில அரசுகளுக்கு இடையேயான அஞ்சல்காரர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சிப்பது அவர் வகித்து வரும் பதவிக்கு அழகல்ல என்று பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறி இருந்தார்.
இந்த நிலையில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு மதுரை நாடாளுமன்ற உறுப் பினர் சு.வெங்கடேசன் பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
ஆளுநர் மாளிகையில் உட்கார்ந்து கொண்டு “எனது கமலாலய வேலைகளை நீங்கள் பார்ப்பது ஆளுநருக்கு அழகல்ல” என்று சொல்லுங்களேன் நயினார் நாகேந்திரன்! இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.