புல்டோசர்மூலம் வீடுகளை இடித்துத் தள்ளிய உத்தரப்பிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

Viduthalai
2 Min Read

ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

புதுடில்லி, ஏப்.2 உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜில் புல்டோசர்மூலம் சிலருடைய வீடுகளை இடித்த நிகழ்வு மனிதாபிமானமற்ற செயல் என்று உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததுடன், பாதிக்கப்பட்ட நபர்க ளுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஆதிக் அகமது சட்டமன்ற உறுப்பினராகவும், பின்னர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் செயல்பட்ட அவர், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி ஆகிய கட்சிகளில் பணியாற்றி யுள்ளார்.
இதனிடையே, சட்டமன்ற உறுப்பினர் கொலை வழக்கில் 2023 ஏப்ரல் 15 ஆம் தேதி கைது செய்யப்பட்ட ஆதிக் அகமது மருத்துவப் பரிசோதனைக்கு சென்றுவிட்டு செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, காவல்துறையினர் முன்னிலையில் ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதரரை 3 பேர் கொண்ட கும்பல் சுட்டுக்கொன்றது. இந்த நிகழ்வு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

வீடுகள் இடிப்பு
இதனிடையே, 2021 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜ் மாவட்டம் லுகர்கஞ்ச் பகுதியில் உள்ள ஆதிக் அகமது உள்ளிட்ட 4 பேரின் வீடுகளை உத்தரப்பிரதேச அரசு புல்டோசர் கொண்டு இடித்தது. வீடுகள் அரசு நிலத்தில் கட்டப்பட்டுள்ளதாகக் கூறி அவற்றை இடித்தது. மேலும் சில வீடுகளும் இடிக்கப்பட்டன.
இதை எதிர்த்து வீட்டின் உரிமையா ளர்களான வழக்குரைஞர், பேராசிரியர் மற்றும் 2 பெண்கள் என 4 பேரும் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ஆனால், அந்த மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட 4 பேரும் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தனர். இந்த வழக்கு அங்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த வழக்கில் உத்தரப்பிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரி வித்துள்ளது. புல்டோசர்கள் கொண்டு வீடுகள் இடிக்கப்பட்ட நிகழ்வு மனிதாபிமானமற்ற செயல் சென்று கூறியுள்ள உச்சநீதிமன்றம், இது மனதை பாதிக்கும் நிகழ்வு என கூறியுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட 4 பேருக்கும் தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரப்பிரதேச அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நிர்வாகம் இந்த இழப்பீட்டை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *