மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (7.3.2025) சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி, கோடம்பாக்கம் மண்டலம், வார்டு-142க்குட்பட்ட பஜார் சாலை மற்றும் ஜீனிஸ் சாலை ஆகிய பகுதிகளில் ரூ.2.39 கோடி மதிப்பில் மழைநீர் வடிகால்கள் கட்டும் பணியினை பஜார் சாலையில் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மண்டலக்குழுத் தலைவர்கள் எம்.கிருஷ்ணமூர்த்தி, ஆர். துரைராஜ், மாமன்ற உறுப்பினர் ப.சுப்பிரமணி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.