Viduthalai Daily NewspaperViduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Notification Show More
Font ResizerAa
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Reading: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முதலமைச்சர் உரையும் – ஒருமனதாக நிறைவேறிய தீர்மானமும்!
Share
Font ResizerAa
Viduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Search
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Follow US
தமிழ்நாடு

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முதலமைச்சர் உரையும் – ஒருமனதாக நிறைவேறிய தீர்மானமும்!

Last updated: March 5, 2025 5:52 pm
Published: March 5, 2025
தமிழ்நாடு
SHARE
Highlights
  • மக்கள் தொகை அடிப்படையிலான  “நாடாளுமன்றத் தொகுதி மறு சீரமைப்பை”  அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒருமனதாகக் கடுமையாக எதிர்க்கிறது!
  • தமிழ்நாட்டுக்கான நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்தால் நம் உரிமை பறிக்கப்படும்!
  • தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய ‘‘கூட்டு நடவடிக்கைக் குழு’’ அமைக்கப்படும்!
Contents
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரைதென்னிந்தியாவின் தலைக்கு மேல் கத்தி தொங்கிக்கொண்டு இருக்கிறதுதமிழ்நாடு வெற்றி பெற்றிருக்கிறது!தமிழ்நாட்டின் குரல் நசுக்கப்படும்!தென்மாநிலங்களுக்கு தரப்படும் தண்டனையாகதான் அமையும்!தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட அழிக்க முடியாத அநீதியாக மாறும்தீர்மானங்கள்பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் உறுதி அளிக்க வேண்டும்அரசமைப்புச் சட்டத்திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும்!கடந்த அய்ம்பதாண்டுகளாக…“கூட்டு நடவடிக்கைக் குழு”
சென்னை, மார்ச் 5 மக்கள் தொகை அடிப்படையிலான “நாடாளுமன்றத் தொகுதி மறு சீரமைப்பை” அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒருமனதாகக் கடுமை யாக எதிர்க்கிறது என்றும், தமிழ்நாட்டுக்கான நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்தால் நம் உரிமை பறிக்கப்படும்! என்றும், தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய “கூட்டு நட வடிக்கைக் குழு” அமைக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரை

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலை மையில் இன்று (5.3.2025) தலைமைச் செயலகத்தில், நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு – மாநில உரிமையை காப்பது தொடர்பாக நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அவர் ஆற்றிய உரை வருமாறு.
ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கக் கூடிய ஒரு விவகாரத்தில் முடிவெடுப்பதற்காக நாம் இங்கு கூடியிருக்கிறோம். கட்சி வேறுபாடுகளை கடந்து, அழைத்திருப்பது யார் என்று பார்க்காமல் எவ்வளவு முக்கியமான பிரச்சினைக்காக அழைத்திருக்கிறோம் என்று மனதில் வைத்துக் கொண்டு இங்கு வந்திருக்கக்கூடிய அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும், பிரதிநிதி களுக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த வணக்கத்தை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
தமிழ்நாடு அரசின் சார்பில், உங்கள் எல்லோ ரையும் வருக… வருக… என்று நான் வரவேற்கிறேன்.

தென்னிந்தியாவின் தலைக்கு மேல் கத்தி தொங்கிக்கொண்டு இருக்கிறது

• தமிழ்நாடு மிகப்பெரிய உரிமைப் போராட்டத்தை நடத்த வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டிருப்பதை உணர்த்துவதற்காகத் தான், இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறோம்.
• தொகுதி மறுசீரமைப்பு எனும் கத்தி தென்னிந்தி யாவின் தலைக்கு மேல் தொங்கிக்கொண்டு இருக்கிறது. இதனால், தமிழ்நாடு கடுமையாக பாதிக்கப்பட இருக்கிறது.
• இன்றைக்கு தமிழ்நாட்டில் மொத்தம் 39 நாடாளுமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. இதை குறைக்கின்ற அபாயம் நெருங்கிக்கொண்டு இருக்கிறது. ஒன்றிய அரசு 2026 ஆம் ஆண்டில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை மறுசீரமைப்பு செய்யப் போகிறது. பொதுவாக, இதை மக்கள்தொகையை கணக்கிட்டுத்தான் செய்வார்கள்.

தமிழ்நாடு வெற்றி பெற்றிருக்கிறது!

• மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது இந்திய நாட்டின் மிக முக்கியமான இலக்கு! அந்த இலக்கில் நம்முடைய தமிழ்நாடு வெற்றி பெற்றிருக்கிறது. பல பத்தாண்டுகளாக, வெற்றிகரமான குடும்பக் கட்டுப்பாடு திட்டங்கள், பெண்கள் கல்வி மற்றும் சுகாதார முன்முயற்சிகள் மூலமாக நாம் இதை சாதித்திருக்கிறோம்.
• தற்போது இருக்கின்ற 543 நாடாளுமன்றத் தொகுதிகள் தொடர்ந்தால், மக்கள் தொகை குறை வாக இருப்பதால், நம்முடைய தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட வாய்ப்பிருக்கிறது. தமிழ்நாடு மொத்தமாக 8 மக்களவை இடங்களை இழக்கும் என்று சொல்கிறார்கள். அதாவது இனி தமிழ்நாட்டுக்கு 39 எம்.பி.க்கள் கிடைக்க மாட்டார்கள்; 31 எம்.பி.க்கள் தான் இருப்பார்கள்.
• நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 848 ஆக உயர்த்தப்பட்டு, தற்போதைய விகிதாச்சாரத்தின்படி மறுசீரமைப்பு செய்யப்பட்டால், நமக்குக் கூடுதலாக 22 தொகுதிகள் கிடைக்க வேண்டும். ஆனால், தற்போதைய மக்கள் தொகையின்படி மறுசீரமைப்பு செய்தால், பத்து தொகுதிகள்தான் கூடுதலாக கிடைக்கும். இதனால் நாம் 12 கூடுதல் தொகுதிகளை இழக்க நேரிடும்.

தமிழ்நாட்டின் குரல் நசுக்கப்படும்!

• இந்த இரண்டு முறைகளிலும், நமக்கான பிரதி நிதித்துவம் குறைந்து, அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களுக்கு, அதிக பிரதிநிதித்துவம் கிடைக்கும்! இதனால், தமிழ்நாட்டின் குரல் நசுக்கப்படும்.
• இது வெறும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை பற்றிய கவலையில்லை; நம்முடைய தமிழ்நாட்டின் உரிமை சார்ந்த கவலை! நம்முடைய தமிழ்நாடு எதிர்கொள்ளவிருக்கும் இந்த முக்கியமான பிரச்சினையில், அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்ற வேண்டுகோளை, உங்கள் அனைவரின் முன்பும் நான் வைக்கிறேன். அனைத்துக் கட்சிகளும், கட்சி எல்லைகளைக் கடந்து குரல் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்தால், அது தமிழ்நாட்டு மக்களின் பிரதிநிதித்துவ எண்ணிக்கையை குறைந்துவிடும்.

தென்மாநிலங்களுக்கு தரப்படும் தண்டனையாகதான் அமையும்!

எனவே, இந்தச் சதியை நாம் அனைவரும் சேர்ந்து முறியடித்தாக வேண்டும். மக்கள்தொகை அடிப்படையில், மக்களவை மாநிலங்களவை மற்றும் சட்டமன்றப் பேரவைகளின் இடங்கள் குறையும் என்று சொல்வது, “மக்கள்தொகை கட்டுப்பாடு” எனும் கொள்கையை, முனைப்பாக செயல்படுத்தி, நாட்டு வளர்ச்சியில் பெரும் பங்காற்றியுள்ள தென்மாநிலங்களுக்கு தரப்படும் தண்டனையாகதான் அமையும். இதை முன்கூட்டியே உணர்ந்துதான், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14 ஆம் நாள், தமிழ்நாடு சட்டமன்றத்தில் நாம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினோம்.
தமிழ்நாட்டின் உரிமை, கூட்டாட்சிக் கருத்தியலோடு கோட்பாடு, தமிழ்நாட்டு மக்க ளின் பிரதிநிதித்துவம் உள்ளிட்ட எதுவும் பாதிக்கப்படக்கூடாது என்பதை தீர்க்கமாக திடமாக அப்போதே நாம் வலியுறுத்தியிருக்கிறோம்.
இந்தத் தொகுதி மறுசீரமைப்பு என்பது, தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல – ஒட்டுமொத்த தென்னிந்தியாவுக்கே அபாயமான செயல்! இதில் நமக்குள் கருத்து மாறுபாடு நிச்சயமாக இருக்காது என்று நினைக்கிறேன்; இருக்கக் கூடாது என்று விரும்புகிறேன்.
இந்திய நாட்டின் கூட்டாட்சி அமைப்புக்கும், தென் மாநிலங்களின் அரசியல் உரிமைக்கும் இது அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.
• இது, இந்திய ஜனநாயகத்தில் தமிழ்நாட்டுக்கு கிடைக்கும் அரசியல் பிரதிநிதித்துவ உரிமை மீதான நேரடி தாக்குதல்!
• இப்படியொரு சம நீதியற்ற அநீதியான தொகுதி மறுசீரமைப்பு செயல்படுத்தப்பட்டால், இந்திய அரசியலில் தமிழ்நாட்டின் குரல் நெரிக்கப்படும்.
• தமிழ்நாட்டின் நலன் மற்றும் தமிழ்நாட்டு மக்களின் நலன் ஆகியவற்றை பாதுகாப்பதில் நம் மாநிலத்திற்கு இருக்கும் பலம் குறைக்கப்படும்.

தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட அழிக்க முடியாத அநீதியாக மாறும்

• 39 எம்.பி.க்கள் இருக்கும்போது எழுப்பும் குரலையே, ஒன்றிய அரசு ஏற்க மறுக்கும் நிலை யில் இந்த எம்.பி.க்கள் எண்ணிக்கை இன்னும் குறைந்தாலோ குறைக்கப்பட்டாலோ அது தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட அழிக்க முடியாத அநீதியாக மாறும் என்பதை, எல்லோரும் நினைத்துப் பார்க்கவேண்டும்! எனவே நம்முடைய நிலைப்பாட்டை, அழுத்தம் திருத்தமாக ஒரே சிந்தனையோடு எடுத்தாகவேண்டும்!
இப்போது இல்லை என்றால், எதிர்காலத்தில் நடைபெற இருக்கும் “மக்கள்தொகை கணக்கெடுப்பு” அடிப்படையில் மேற்கொள்ளவிருக்கும் மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறு சீரமைப்பை, நாம் கடுமையாக ஆணித்தரமாக எதிர்க்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம்.
எனவே, உறுதியான ஒரு தீர்மானத்தை நிறை வேற்ற வேண்டும் என்று சொல்லி நான் அந்த தீர்மானங்களை முன்மொழிகிறேன்.

தீர்மானங்கள்

• இந்திய நாட்டின் கூட்டாட்சி அமைப்பிற்கும், தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவ உரிமைக்கும் மிகப்பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடிய – மக்கள் தொகை அடிப்படையிலான “நாடாளுமன்றத் தொகுதி மறு சீரமைப்பை” இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒருமனதாகக் கடுமையாக எதிர்க்கிறது.

பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் உறுதி அளிக்க வேண்டும்

• நாட்டின் நலனுக்காக மக்கள் தொகைக் கட்டுப்பாட்டை முனைப்பாகச் செயல்படுத்திய ஒரே காரணத்திற்காக, தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் குறைக்கப்படுவது முற்றிலும் நியாயமற்றது. இந்த வகையில், மக்கள் தொகைக் கட்டுப்பாட்டை அனைத்து மாநிலங்களும் முன்னெடுப்பதை ஊக்குவிக்கும் வகையில், 1971 ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையிலேயே நாடாளுமன்றத் தொகுதிகள் தொடர்ந்து வரையறுக்கப்படும் என்று கடந்த 2000 ஆம் ஆண்டில் அன்றைய பிரதமர் அவர்கள் உறுதி அளித்தவாறே, தற்போதும் இந்த வரையறை 2026 இல் இருந்து மேலும் 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்று மாண்புமிகு பிரதமர் அவர்கள் நாடாளுமன்றத்தில் உறுதி அளிக்க வேண்டும்.

அரசமைப்புச் சட்டத்திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும்!

• மேலும், நாடாளுமன்றத்தில் தற்போதைய உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும் பட்சத்தில், “1971 ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் தற்பொழுது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மாநிலங்களுக்கிடையே எந்த விகிதத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை உள்ளனவோ அதே விகிதத்தில் – தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்குத் தேவையான அரசமைப்புச் சட்டத்திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும்’’ என ஒன்றிய அரசை இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் வலியுறுத்துகிறது.

கடந்த அய்ம்பதாண்டுகளாக…

• தொகுதி மறுசீரமைப்புக்கு தமிழ்நாடு எதிரானதாக இல்லை என்றும், அதேசமயம் கடந்த அய்ம்பதாண்டுகளாக சமூக – பொருளாதார நலத்திட்டங்களைச் சிறப்புற செயல்படுத்தியதற்கான தண்டனையாகத் தொகுதி மறுசீரமைப்பு அமைந்துவிடக் கூடாது எனவும் அனைத்துக் கட்சிக் கூட்டம் வலியுறுத்துகிறது.
• இக்கோரிக்கைகளைத் தமிழ்நாட்டின் குறைந்தபட்ச கோரிக்கைகளாக அனைத்துக் கட்சிக்கூட்டம் முன்வைக்கிறது.

“கூட்டு நடவடிக்கைக் குழு”

• இக்கோரிக்கைளையும், அவைசார்ந்த போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவும் – மக்கள் மத்தியில் இப்பிரச்சினை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடவும் – தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநி லங்களில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய “கூட்டு நடவடிக்கைக் குழு” ஒன்றை அமைத்திடவும், அதற்கான முறையான அழைப்பை மேற்படி கட்சிகளுக்கு அனுப்பி வைக்கவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
இந்த தீர்மானங்களின் மீதான உங்களின் கருத்தை, அனைத்துக் கட்சித் தலைவர்களும் பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மீண்டும் உங்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
– இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார்.
Ad imageAd image
தொகுதி மறுவரையறை பிரச்சினையில் தி.மு.க.வின் தலைமையில் ஓரணியில் தமிழ்நாடு அணி வகுக்கும்!
‘கேலோ இந்தியா’ திட்டம் தமிழ்நாட்டுக்கு மட்டும் ஓரவஞ்சனை!
ரூ.290 கோடி மதிப்பில் அமையவுள்ள திருச்சி நூலகத்திற்கு காமராசர் பெயர்
பொதுமக்கள், காவல் துறையினர் நலனுக்காக ரூ.54.36 கோடி நிதி ஒதுக்கீடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
அண்ணா பல்கலைக்கழகத்தில் சிவில் இன்ஜினியரிங் பாடப்பிரிவுகள் மேற்படிப்புகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி 9ஆம் தேதி நடைபெறுகிறது
TAGGED:அனைத்துக் கட்சிக் கூட்டம்மக்கள் தொகைமுதலமைச்சர்
Share
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Ad imageAd image
- Advertisement -
Ad imageAd image

நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகள்

About US

"Viduthalai" is a Tamil newspaper founded by the social reformer Thanthai Periyar, in 1935. Aimed at promoting rationalism, social justice, and gender equality, it played a crucial role in advocating for the rights of marginalized communities in Tamil Nadu. The newspaper remains significant in the legacy of Periyar’s movement for a more equitable society. Under the able leadership of K. Veeramani, the current editor of "Viduthalai," the newspaper continues to uphold the values of Periyar's vision for social justice and equality. Veeramani, a prominent activist and advocate for rationalism, has revitalized the publication, ensuring it addresses contemporary issues while staying true to its foundational principles.
Quick Link
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Other Links
  • Print Subscription
  • Privacy Policy
  • Contact
Our Other Publications
  • Unmai Magazine
  • The Modern Rationalist
  • Periyar Pinju Children’s Magazine
  • Dravidian Book House
© Viduthalai. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?