அரித்துவார், ஜூலை 13 அரித்துவார் நெடுஞ்சாலையில் முதிய இஸ்லாமிய இணையர் காரில் வந்துகொண்டு இருந்தனர். அப்போது காவட் யாத்திரை செல்லும் கும்பலிடம் வழிவிடச்சொல்லி ஹாரன் அடித்தனர். இதனை அடுத்து திரும்பிப் பார்த்த அவர்கள் காரில் இஸ்லாமிய இணையர் இருப்பதை அறிந்து, முதலில் அவர்களோடு வாக்குவாதம் செய்தனர். பின்னர் இஸ்லாமிய இணையரை முதியவர்கள் என்றும் பார்க்காமல் காரில் இருந்து இழுத்துவெளியே போட்டனர். பின்னர் கும்பாலாக சேர்த்து அவர்களை அடித்து விரட்டினர். பின்னர் காரை அடித்து நெறுக்கினர், காரில் இருந்த பொருட்களை கொள்ளையடித்தனர். அவர்கள் கடைகளுக் குச் சென்று வாங்கிவந்த பொருட்களையும் எடுத்துக் கொண்டனர். காவல்துறையினர் முன்பாகவே கார் சேதப்படுத்தப்பட்ட காட்சிப் பதிவு சமூக இணையதளங்களில் வைரலானது.
உத்தரப்பிரதேசம் புலந்த்செகர் என்னும் பகுதியில் வாகனத்தில் ரோந்து வந்த காவல்துறையினர் பொதுமக்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் சாலை ஓரமாக செல்லுமாறு கூறினர். இதனை அடுத்து காவட் எடுத்துவந்த வன்முறையாளர்கள் காவல்துறை வாகனத்தை சேதப்படுத்தினர். இதனால் அவர்களுக்கு பயந்து காவலர்கள் தம் வாகனத்தை பின்புறமாகவே ஓட்டிச் சென்று தப்பும் காட்சியும் சமூக இணைய தளங்களில் வைரலானது. இதன்மீது – ‘தாக்குதல் நடத்துவபவர்கள் சிவபக்தர்களா அல்லது ரவுடிகளா, தாக்கியவர்கள் மீது காவல்துறையினரின் நடவடிக்கை தேவை’ என்பது போன்ற விமர்சனங்கள் எழுப்பப் பட்டன. காவல்துறையினரின் கண்களுக்கு முன்பே இரண்டு நிகழ்வுகள் நடந்தது சமுகவலைதளங்களில் காட்சிப் பதிவு களாகப் பரவுகிறது, இருப்பினும் அடை யாளம் தெரியாத நபர்கள் என்றே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.