பதிலடி: தமிழ் மொழியை செம்மொழி ஆக்க சட்டம் கொண்டு வந்தால் என்னென்ன பயன் என்ற கேள்விக்கு 13.6.2004 நாளைய ‘தினமலர்’ வாரமலர் என்ன பதில் அளித்தது தெரியுமா?
‘‘காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும், ஏழை நெசவாளர் வீட்டுத் தறி நிற்காமல் இயங்கும், ஒருவேளை கஞ்சிக்கே வழி இல்லாத வருக்கு மூன்று வேளையும் மட்டன் பிரியாணி கிடைக்கும்’’ என்று எழுதிய தினமலரின் பார்ப்பன புத்தி தானே ‘இந்து தமிழ்’ பூநூலுக்கும் இருக்கும்!
மக்களைச் சந்தித்து கருத்துகளைக் கூற நடைப் பயணம் செய்வதும், நாற்றம் பிடித்த பல்வேறு தொழிற்சாலைகளின் கழிவுகள் சங்கமமாகும் ஒரு நதியில் ‘புனித நீர்’ என்று சொல்லி குளிப்பதும் ஒன்றா…! இந்து தமிழே?