இந்தியாவில் ஒரு தொழிலாளி சராசரியாக வாரத்திற்கு 46.7 மணி நேரம் வேலை செய்வதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. சீனாவில் 46.1 மணி நேரமும், பிரேசிலில் 39 மணி நேரமும், அமெரிக்காவில் 38 மணி நேரமும் வேலை செய்வது தெரியவந்துள்ளது.
முன்னதாக, எல் அண்ட் டி தலைவர் ஞாயிற்றுக்கிழமைகளில் தொழிலாளர்களை வேலைப்பார்க்க வைக்க முடியவில்லை என்று வருந்தியதோடு, சீனர்கள் 90 மணி நேரம், அமெரிக்கர்கள் 50 மணி நேரம் வேலைப் பார்ப்பதாகவும் கூறியிருந்தார்.