ஸநாதன தர்மம் என்பது குலத் தொழிலே! இதில் என் கருத்து உறுதியானதே!

Viduthalai
3 Min Read

கோவிலுக்குள் மேல் சட்டை அணியக்கூடாது என்பதற்கு எதிரான கருத்தும் வரவேற்கத்தக்கது!
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

திருவனந்தபுரம், ஜன.2 ‘‘ஸநாதன தர்மம் குறித்தும், சமூக சீர்திருத்தவாதி நாரா யண குரு குறித்தும் நான் கூறிய கருத்துகளில் உறு தியாக இருக்கிறேன். என் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை” என, கேரள முத லமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் மா.கம்யூ னிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் இடதுசாரி ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.
ஒடுக்கப்பட்ட மக்க ளின் மேம்பாட்டுக்குப் பாடுபட்ட ஆன்மிகவாதியும், சமூக சீர்திருத்தவாதியுமான நாராயண குருவின் சிவகிரி மடத்தில், சிவகிரி யாத்திரை மாநாடு 31.12.2024 அன்று நடந்தது. இதில் பங்கேற்ற பினராயி விஜயன் பேசிய தாவது:
ஸநாதன தர்மம் என்பது வர்ணாசிரமத்தை போதிக்கிறது. அதாவது குலத் தொழிலை ஊக்குவிக்கிறது. ஆனால், நாராயண குரு அதை ஏற்கவில்லை.

அவர், ஒரு ஜாதி, ஒரு மதம், ஒரு கடவுள் என்பதை போதித்தார். அவர் எந்த நிலையிலும், ஸநாதன தர்மத்துக்கு ஆதரவாக கருத்துக் கூறியதில்லை; அதைப் பின்பற்றி நடக்கவும் இல்லை.
உண்மையில் அவர், ஸநாதன தர்மத்தை சீர் செய்து தனி தர்மத்தை அறிவித்தார். வரலாற்றை ஆய்வு செய்தால் இந்த உண்மை தெரியும்.
இவ்வாறு அவர் பேசி யிருந்தார்.
இதற்கு, பா.ஜ., கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. ஸநாதன தர்மத்துக்கு எதி ராகவும், நாராயண குருவுக்கு எதிராகவும் பினராயி விஜயன் பேசி யுள்ளதாக அந்த கட்சி விமர்சித்திருந்தது.
இது குறித்து, பின ராயி விஜயன் நேற்று (1.1.2025) கூறுகையில், ‘‘நான் என் கருத்தில் உறு தியாக இருக்கிறேன். நாராயண குரு குறித்தே பேசினேன். ஸநாதன தர்மத்தை இழிவுபடுத்தும் வகையில் நானாக எதை யும் கூறவில்லை. ஸநா தன தர்மம் குறித்த நாராயண குருவின் பார்வையை மட்டுமே வெளிப்படுத்தினேன்,” என்றார்.

கடும் எதிர்ப்பு!
இதுகுறித்து, பா.ஜ., வைச் சேர்ந்த மேனாள் ஒன்றிய அமைச்சர் வி.முரளீதரன் கூறியுள்ளதாவது:
ஸநாதன தர்மம் என்பது மன்னராட்சியை ஊக்குவிக்கிறது; அது ஜன நாயகத்துக்கு எதிரானது என்ற தவறான கருத்தை விதைக்க பினராயி விஜ யன் முயற்சிக்கிறார். பயங்கர வாதத்துக்கு ஆதரவாகவும், நம் நாட்டுக்கு எதிராகவும் உள்ள தங்களுடைய ஓட்டு வங்கியை திருப்தி படுத்த இவ்வாறு அவர் பேசியுள்ளார். ஸநாதன தர்மத்துக்கு எதிராக பொய்யான ஒரு கருத்தை பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.

‘மேல்சட்டை அணியலாம்!’
சிவகிரியில் நடந்த நிகழ்ச்சியில், அதன் தலைவரான சுவாமி சச்சி தானந்தா பேசுகையில், ‘‘கோவில்களுக்குச் செல்லும் பக்தர்கள், மேல்சட்டை அணி யக்கூடாது என்பது சமூக நீதிக்கு எதிரானது. அந்த முறையை கைவிட வேண்டும்,” என்றார். அதை, நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் பினராயி விஜ யன் ஆமோ தித்துப் பேசினார்.
இது குறித்து பினராயி விஜயன் நேற்று (1.1.2025) கூறியதாவது:
ஒரு தேவசம் போர்டின் நிர்வாகிகள் என்னை சந்தித்த னர். அவர்க ளுடைய கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், மேல்சட்டை அணியக்கூ டாது என்ற நடைமுறையை கைவிடப் போவதாக கூறியுள்ளனர். இது வரவேற்கக்கூடிய முடிவு.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆனால், எந்த தேவசம் போர்டு என்பதை அவர் தெரிவிக்கவில்லை.கேர ளாவில் அய்ந்து முக்கிய தேவசம் போர்டுகள் உள்ளன. குருவாயூர், திருவிதாங்கூர், மலபார், கொச்சின், கூடல்மா ணிக்கம் ஆகிய அய்ந்து தேவசம் போர்டுகளின் கீழ், 3,000 கோவில்கள் உள்ளன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *