பாட்டியாலா, டிச.19 பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உத்தரப் பிரதேசம் , பஞ்சாப்- அரியானா, டில்லி எல் லைகளில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிப்ரவரி 13 முதல் பஞ்சாப்- அரியானா எல்லையான ஷம்பு வில் விவசாயிகள் முகா மிட்டுள்ளனர். அவர் களை டில்லி நோக்கி முன்னேற விடாமல் காவல்துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்தும் கண்ணீர் புகை குண்டுகளை வீசி யும் தடுத்த வண்ணம் உள்ளனர்.
தண்டவாளத்தில் படுத்து மறியல்
சம்யுக்த கிசான் மோர்ச்சா மற்றும் கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகிய விவசாய அமைப்புகள் இந்த ரயில் மறியல் போராட்டத்தில் பஞ்சாப் மக்கள் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தன.கிசான் மஸ்தூர் மோர்ச்சா தலைவர் சர்வான் சிங் பந்தேர் கூறுகையில், மதியம் 12 மணி முதல் விவசாயிகள் பல இடங்களில் ரயில் தண்ட வாளத்தில் அமர்ந்து மதியம் 3 மணி வரை அங்கேயே இருப்பார்கள் என்று தெரிவித்தார்.
லூதியானாவில் சாஹ்னேவால், பாட்டி யாலாவில் ஷம்பு, மொஹாலி, மற்றும் சங் ரூரில் சுனம் மற்றும் லெஹ்ரா ஆகிய இடங் களில் போராட்டம் நடத்தப்படும் என்று கூறப்பட்ட நிலை யில் அதன்படி விவ சாயிகள் ரயில்வே தண்டவாளத்தில் நின்றும், படுத்தும் மறியல் போராட்டம் நடத்தினர் இதனால் அம்மாநிலத்தில ரயில் சேவை பாதிக்கப் பட்டுள்ளது.