உ.பி. அரசு மருத்துவமனையில் தீ விபத்து: 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு!

viduthalai
1 Min Read

லக்னோ, நவ.16- பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் அரசு மருத்துவக் கல்லூரியில் செயல்பட்டு வந்த குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் நேற்று (15.11.2024) நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தன.

உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் உள்ள மகாராணி லட்சுமி பாய் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் சிசு பராமரிப்புப் பிரிவில் 15.11.2024 அன்று இரவு 10.45 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து தீயணைப்புத் துறை மற்றும் ராணுவ தீயணைப்பு வாகனம் நிகழ்விடத்துக்கு விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டன.

எனினும் தீயில் கருகியும், கரும் புகை காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டும் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தன. 37 குழந்தைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டன. உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நிகழ்வுக்கு மிகுந்த வேதனை தெரிவித்துள்ள மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை போா்க்கால அடிப்படையில் மேற்கொள்ளுமாறு மாவட்ட நிா்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளாா்.

மேலும், இந்த நிகழ்வு தொடா் பாக விசாரணை நடத்தி 12 மணி நேரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய ஜான்சி வட்டாட்சியருக்கும், காவல் துறை டிஐஜி-க்கு முதலமைச்சர்வா் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளாா்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *